சம்பள உதவித்தொகை திட்டத்தின்கீழ் 90,000க்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு இம்மாதம் $600 மில்லியனுக்கு மேல் வழங்கப்படும்.
இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நிறுவனங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் (ஐஆர்ஏஎஸ்) நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அதிகரித்து வரும் சம்பள கட்டணங்களைச் சமாளிக்க இத்தொகை உதவும்.
இத்திட்டத்தின் வழி பலனடைய இருக்கும் நிறுவனங்களில், கிட்டத்தட்ட 70 விழுக்காட்டு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும்.
இவ்வுதவித் திட்டத்திற்குத் தகுதிபெற முதலாளிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தொகை குறித்த விவரங்களைத் தாங்கிய கடிதங்களை இம்மாத இறுதிக்கும் ஐஆர்ஏஎஸ் அனுப்பிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களுடன் உற்பத்தித் திறன் லாபத்தைப் பகிர்ந்துகொள்ள இத்திட்டம் ஊக்குவிப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

