மலேசிய ஊழியர்களை சிங்கப்பூரில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு

மலேசிய ஊழியர்களை சிங்கப்பூரில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவு

2 mins read
812d66d8-915e-43d5-99dd-3b04e3fd7cfb
மலே­சியா அறி­வித்­துள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யி­னால் பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், மலே­சி­யா­வைச் சேர்ந்த தங்­க­ளது ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ரில் உட­ன­டி­யா­கத் தங்க வைப்­ப­தற்கு, நிதி ஆத­ரவு வழங்­கு­வது குறித்து சிங்­கப்­பூர் அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­கிறது. படம்: எஸ்டி, அரிஃபின் ஜமார் -

மலே­சியா அறி­வித்­துள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யி­னால் பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், மலே­சி­யா­வைச் சேர்ந்த தங்­க­ளது ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ரில் உட­ன­டி­யா­கத் தங்க வைப்­ப­தற்கு, நிதி ஆத­ரவு வழங்­கு­வது குறித்து சிங்­கப்­பூர் அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­கிறது.

அத்­த­கை­யோர் தங்­கு­வ­தற்கு ஹோட்­டல்­கள், ஊழி­யர் தங்­கு­வி­டுதி ஆகி­ய­வற்றை நடத்­து­ப­வர்­கள் குறை­வான வாட­கைக்கு தங்க இட­ம­ளிப்­ப­தன் தொடர்­பி­லும் அர­சாங்­கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்.

"மக்­க­ளுக்கு அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாத வகை­யில் சேவை­கள் வழங்க வேண்­டும் என்­பதை உறுதி செய்­வதே நமது நோக்­கம்," என்று மனி­த­வள அமைச்சு நேற்று குறிப்­பிட்­டது.

நாளை முதல் இம்­மாத இறுதி வரை மலே­சி­யா­வில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடப்­பில் இருக்­கும் என நேற்­றி­ரவு மலே­சியா அறி­வித்­தது.

இந்த ஆணை­யின்படி மலே­சி­யர்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வ­தற்­கும் சுற்­றுப்­ப­ய­ணி­கள், வெளி­நாட்­டுப் பய­ணி­கள் மலே­சி­யா­வுக்­குச் செல்­வ­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான நிலச் சோத­னைச்­சா­வ­டி­கள் வழி­யாக தின­மும் சுமார் 415,000 பய­ணி­கள் சென்று வரு­கின்­ற­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரில் பணிபுரி­யும் மலே­சி­யர்­கள்.

கிட்­டத்­தட்ட 100,000 மலே­சி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் வசிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்று கணிக்­கப்­படு­கிறது.

அத்­த­கை­யோர் தங்­க­ளது உற­வி­னர்­கள், நண்­பர்­கள், சக ஊழி­யர்­கள் போன்­றோ­ரு­டன் சேர்ந்து சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருக்க நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­க­லாம்.

சில ஊழி­யர்­க­ளுக்கு இது மிக­வும் இணக்­க­மு­டைய தெரி­வாக இருக்­க­லாம் என்று கூறப்­பட்­டது.

அத்­த­கைய ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள முடி­யா­த­வர்­கள் ஹோட்­டல்­கள், ஊழி­யர் தங்கு­வி­டு­தி­கள், வீட­மைப்­புக் கழக வீடு­க­ளின் அறை­கள், வீடு­கள், தனி­யார் குடி­யி­ருப்­பு­கள் போன்­ற­வற்­றில் தங்க வைக்­கப்­ப­ட­லாம்.

நிறு­வ­னங்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான மனி­த­வ­ளத்­தைப் பற்றி கவ­ன­மாக ஆராய்ந்து, அவர்­க­ளது ஊழி­யர்­கள் சிங்கப் பூரில் தங்­கி­யி­ருக்க வேண்­டிய தேவை­யைப் பொறுத்து உகந்த முடிவை எடுக்க வேண்­டும் என மனி­த­வள அமைச்சு கூறி­யுள்­ளது.

ஆத­ரவு வழங்­கு­வ­தில், சுகா­தா­ரம், பாது­காப்பு, துப்­பு­ரவு, குப்பை நிர்­வா­கம், வளங்­கள் நிர்­வா­கம், தள­வா­டங்­கள், போக்­கு­வ­ரத்து போன்ற அத்­தி­யா­வ­சி­யச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளின் தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றது அமைச்சு.

இதற்­கி­டையே, தமது நிறு­வ­னத்­தில் பேருந்து ஓட்­டு­நர்­க­ளா­கப் பணி­யாற்­றும் மலே­சி­யர்­களை பல்­வேறு ஹோட்­டல்­களில் தங்க வைக்­கும் ஏற்­பாடு­களைச் செய்­துள்­ளதாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நேற்று தெரி­வித்­தது.

இந்த நட­வ­டிக்கை உட­ன­டி­யாக நடப்­புக்கு வரு­கிறது. இத­னால் எங்­கள் பேருந்து சேவை­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டாது என்று அந்­தப் பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னம் கூறி­யது.

மலே­சி­யா­வைச் சேர்ந்த தனது பேருந்து ஓட்­டு­நர்­களை பேருந்து பணி­ம­னை­யில் உள்ள சாய்வு நாற்­கா­லி­களில் தூங்க எஸ்­பி­எஸ் டிரான்­சிட் கேட்­டுக்­கொண்­டுள்­ளது என்று தி ஆன்­லைன் சிட்­டி­சன் இணை­யத் தளத்­தில் பதி­வி­டப்­பட்ட செய்தி முற்றிலும் பொய்­யா­னது என்­றும் அது கூறி­யது.