சிங்கப்பூரில் தங்கும் மலேசிய ஊழியர்களுக்கு ஆதரவு

சிங்கப்பூரில் தங்கும் மலேசிய ஊழியர்களுக்கு ஆதரவு

2 mins read
b167b91c-adf2-4c18-a3bb-76dc280d2800
சிங்­போஸ்ட் நிறு­வ­னத்­தில் வேலை செய்­யும் மலே­சி­யர்­களில் 20 விழுக்­காட்­டி­னர் இங்கு தங்க மறுத்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டது. அவர்­கள் தங்­க­ளின் வரு­டாந்­திர விடுப்­பைப் பயன்­ப­டுத்­திய பின்­னர் சம்­ப­ளம் இல்லா விடுப்பு எடுத்­துக்­கொள்­வ­தாக முடி­வெ­டுத்­துள்­ள­னர். படம்: எஸ்டி, கெவின் லிம் -

இரண்டு வாரங்­க­ளுக்கு மலே­சியா அதன் எல்­லை­களை மூடி­யுள்ள நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் தங்க முடி­வெ­டுத்­துள்ள மலே­சிய ஊழி­யர்­க­ளுக்­குத் தங்­கும் வச­தி­க­ளை­யும் அவர்­க­ளின் முத­லா­ளி­க­ளுக்கு இத­னால் ஏற்­படும் செல­வு­க­ளை­யும் சமா­ளிக்க அர­சாங்­கம் வழி­க­ளைக் கண்­ட­றி­யும் என்று கூறப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வில் நேற்று முதல் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடப்­புக்கு வந்­ததை அடுத்து சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­களில் சிலர் இங்கு தங்க முடி­வெ­டுத்­த­னர்.

"ஊழி­யர்­க­ள் தங்­கு­வ­தற்­கான வச­தி­களை ஏற்­பாடு செய்­வது குறித்து மனி­த­வள அமைச்சு பேசி­யுள்­ளது. இதன் பின்­னர் முத­லா­ளி­கள் தங்­க­ளின் தேவைக்­கேற்ப ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்­ள­லாம்," என்­றார் தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன்.

மலே­சிய ஊழி­யர்­கள் தங்­கு­வ­தற்­குப் போது­மான இட­வ­சதி குறித்­தும் அதன் தொடர்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய செல­வு­க­ளைச் சமா­ளிப்­பது குறித்­தும் ஆத­ரவு தரப்­படும் என்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

காலாங் பாரு­வில் அமைந்­துள்ள சிங்­போஸ்ட் அஞ்­சல் விநி­யோ­கத் தளத்­தில் நேற்று திரு ஈஸ்­வ­ரன் மற்­றும் தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் அங்­கி­ருந்த கிட்­டத்­தட்ட 90 அஞ்­சல் ஊழி­யர்­க­ளைச் சந்­தித்து நன்றி கூறி­னர்.

அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு சிங்­போஸ்ட் நிறு­வ­னம் 400க்கும் மேற்­பட்ட அதன் மலே­சிய ஊழி­யர்­கள் மூன்று வெவ்­வேறு ஹோட்­டல்­களில் தங்க ஏற்­பாடு செய்­துள்­ளது. இதன்­படி காலாங் சிங்­போஸ்ட் கிளை­யில் பணி­பு­ரி­வோ­ருக்கு 'ஹாலிடே இன்' ஹோட்­ட­லில் தங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் சிங்­போஸ்ட் நிறு­வ­னத்­தில் வேலை செய்­யும் மலே­சி­யர்­களில் 20 விழுக்­காட்­டி­னர் இங்கு தங்க மறுத்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டது.

அவர்­கள் தங்­க­ளின் வரு­டாந்­திர விடுப்­பைப் பயன்­ப­டுத்­திய பின்­னர் சம்­ப­ளம் இல்லா விடுப்பு எடுத்­துக்­கொள்­வ­தாக முடி­வெ­டுத்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் மலே­சியா விதித்­துள்ள ஆணை, இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்­தும் பேசி­னார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

"நிலை­மை­யைத் தொடர்ந்து கண்­கா­ணிப்­போம். நம் நிறு­வ­னங்­கள் கூறும் கருத்­து­க­ளைக் கேட்­டுக்­கொள்­வோம். மேற்­கொண்டு என்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­லாம் என்­பது குறித்­துத் தகுந்­த­படி பின்­னர் முடி­வெ­டுப்­போம்," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.