வெறிச்சோடிக் காணப்பட்ட சோதனைச்சாவடிகள்

வெறிச்சோடிக் காணப்பட்ட சோதனைச்சாவடிகள்

1 mins read
016222a9-4f92-42b5-a3ae-7de9082a8b1e
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மலேசியாவில் நேற்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்தது. இதனால் எப்போதும் வாகன நெரிசலுடன் காணப்படும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் நேற்று வெறிச்சோடி போயின. தினமும் கிட்டத்தட்ட 415,000 பயணிகளின் வருகை இரு சோதனைச்சாவடிகளிலும் பதிவாகி வரும் நிலையில் இம்மாதம் 31ஆம் தேதிவரை இந்த ஆணை நீடிக்கும் என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் திங்கட்கிழமை இரவு அறிவித்தார். அதையடுத்து பலர் சிங்கப்பூருக்குள் நேற்று முன்தினம் இரவு வரை அடித்துப் பிடித்துக்கொண்டு வந்த வண்ணம் இருந்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்