கூடுதலாக 32 பேருக்குக் கிருமித்தொற்று

கூடுதலாக 32 பேருக்குக் கிருமித்தொற்று

1 mins read
dbd0dcb1-9141-4a0a-880f-020e692bd402
-

சிங்கப்பூரில் மேலும் 32 பேரை கொரோனா கிருமி தொற்றி இருப்பதை மருத்துவ சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அதில் 24 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதையடுத்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதால் எழுவர் இன்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 124 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பிவிட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 15 பேர் உட்பட இன்னும் 221 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.