கழிவறையில் சிக்கிக்கொண்ட மாதைக் காப்பாற்றிய இந்தியருக்கு விருது

வெஸ்ட் கோஸ்ட் உண­வங்­காடி நிலை­யத்­தில் திரு ரெஷி குமார் தென்­ன­ரசு இருந்­த­போது, தனது மனைவி உடற்­கு­றை­யுள்­ளோர் பயன்­ப­டுத்­தும் கழி­வ­றை­யில் முன்­பின் அறி­மு­க­மில்­லாத ஓர் ஆட­வ­ரு­டன் மாட்­டிக்­கொண்­டார் என்று ஒருவர் உதவி கேட்­டார்.

உடனே செயலில் இறங்­கிய ரெஷி, கழி­வ­றை­யின் 2 மீட்­டர் உய­ர­முள்ள சுவ­ரில் தாவி ஏறி, கழி­வ­றைக்­குள் புகுந்து, அந்த ஆட­வரை பெண்­ணி­ட­மி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்­கு­மாறு சொல்லி, கழி­வ­றைக் கத­வைத் திறந்­தார்.

போலிஸ் அங்கு வந்து சேர்ந்­த­து­டல் அந்த ஆட­வர் அங்­கி­ருந்து தப்­பி­யோட முயன்­றார். ஆனால், திரு ரெஷி­யின் உத­வி­யு­டன் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டார். பின்­னர் அந்த ஆட­வர் மான­பங்­கச் செய­லுக்­காக கைது செய்­யப்­பட்­டார்.

இந்­தச் சம்­ப­வத்­தில் உதவி தேவைப்­பட்­டோ­ருக்­குத் தக்க நேரத்­தில் உத­விக்­க­ரம் நீட்­டி­ய­தற்­காக திரு ரெஷிக்கு நேற்று பொது உணர்வு விருது வழங்கி சிறப்­பிக்­கப்­பட்­டது. அதை அவ­ருக்கு வழங்­கிய கிள­மெண்டி போலிஸ் பிரி­வின் தலை­வர் உதவி ஆணை­யா­ளர் ஜெரோட் பெரேரா பேசு­கை­யில், “குடிமை உணர்­வு­ட­னும் தைரி­யத்­து­ட­னும் செயல்­பட்­டார் திரு ரெஷி. அவ­ரது செயல் சமூ­கத்­தில் உள்­ள­வர்­க­ளுக்கு ஊக்­கம் அளித்­தி­ருக்­கிறது,” என்­றார்.

திரு ரெஷி­யு­டன் மேலும் ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்கு சமூக பங்­கா­ளித்­துவ விரு­தும் கிள­மெண்டி போலிஸ் தலை­மை­ய­கத்­தில் நடை­பெற்ற அதே நிகழ்ச்­சி­யில் வழங்­கப்­பட்­டன.

கம்­ஃபர்ட்­டெல்­குரோ, சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, குவீன்ஸ்­ட­வுன் துடிப்­பான முதி­யோர் குழு, உலு பாண்­டான் துடிப்­பான முதி­யோர் குழு, ஷங்­ரிலா ராசா செந்­தோசா உல்­லா­சத் தளம் ஆகி­யவை குற்­றத் தடுப்­புத் திட்­டங்­களை அமல்­ப­டுத்­து­வ­தற்கு கிர­மெண்டி போலிஸ் தலை­மை­ய­கத்­து­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்­ட­தற்கு விருது பெற்­றன.

“குற்­றத்­த­டுப்பு முயற்­சி­களில் போலி­சுக்­கும் சமூக பங்­கா­ளி­க­ளுக்­கும் இடையே நில­வும் வலு­வான ஒத்­து­ழைப்­புக்கு மதிப்­ப­ளிக்­கி­றோம். அதன் கார­ண­மா­கத்­தான் சிங்­கப்­பூர் வாழ்­வ­தற்கு பாது­காப்­பான இட­மா­கத் திகழ்­கிறது,” என்­றும் உதவி ஆணை­யா­ளர் ஜெரோட் பெரேரா தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!