கொவிட்-19 கிருமி தொற்றியோரைப் பற்றி கூடுதல் தகவல்கள்

1 mins read
7101dee9-b03f-4c60-8b00-718101845f31
கோப்புப்படம்: எஸ்டி -

புதன்கிழமையன்று 47 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. ஒரே நாளில் ஆக அதிக எண்ணிக்கையில் பதிவான சம்பவங்கள் இதுவே என்று கூறப்பட்டது. இந்த 47 சம்பவங்களில் 33 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள். இவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியான் மற்றும் ஆசிய பகுதி நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தார்கள்.

இதில் 30 பேர் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால வருகை அனுமதி அட்டை உடையவர்கள். எஞ்சிய மூவர் குறுகியகால வருகையாளர்கள். இருவர் 'சர்ச் ஆஃப் சிங்கப்பூர்' (புக்கிட் தீமா) தேவாலயம், 'போல்டர்+' உடற்பயிற்சிக் கூடம் ஆகிய குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். ஒருவர் அல்-முட்டாகின் பள்ளிவாசலுடன் தொடர்புடையவர். அறுவர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்புடையவர்கள். ஐவருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை என்று கூறப்பட்டது.