வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு; அறிவுறுத்தல்கள்

வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு; அறிவுறுத்தல்கள்

1 mins read
8ba52feb-010b-4bb8-a2b7-2716de579eaa
படம்: எஸ்டி, லிம் யாஹுய் -

சிங்­கப்­பூ­ருக்­குள் வரும் சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு 14 நாள் வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும். இன்று இரவு 11.59 மணி முதல் இது நடப்­புக்கு வரு­கிறது.

இந்­நி­லை­யில் வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் அனை­வ­ருக்­கும் அது தொடர்பான அறி­வு­றுத்­தல்­களை அறிந்­தி­ருத்­தல் அவ­சி­யம்.

உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வோர் 14 நாட்­க­ளில் எல்லா நேரத்­தி­லும் வீட்­டி­லேயே இருக்­க­வேண்­டும். தடைக்­காப்பு ஆணை­யி­லி­ருந்து இது சற்று வேறு­படும். தடைக்­காப்பு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டால், தனி அறை மற்­றும் கழி­வறை ஆகி­ய­வற்­றில் தான் இருக்க முடி­யும்.

உணவு அல்­லது அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு வெளியே செல்­ல­வேண்­டாம்; விநி­யோ­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் அல்­லது அண்­டை­வீட்­டார்/அடித்­தள அமைப்­பு­க­ளின் உத­வியை நாட­லாம். பிற­ரு­டன் தொடர்­பைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்.

இந்­நி­லை­யில் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை மீறு­வோர் தண்­ட­னைக்கு ஆளா­வர். முதல் முறை குற்­றம் புரி­வோ­ருக்கு $10,000 அப­ரா­தம் அல்­லது 6 மாதச் சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.