பிரிட்டனில் படித்து வரும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் நாடு திரும்பிட விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்ய முயன்று வரலாம். இந்நிலையில் பயணச்சீட்டுகளை உறுதிசெய்ய அவர்கள் அரசாங்கத்துடன் பதிவுசெய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் இம்மாதம் சிங்கப்பூருக்குத் திரும்பிட போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் எஸ்ஐஏ நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பதிவுசெய்துகொள்ள விரும்புவோர் go.gov.sg/flyinghome2020 என்ற இணைய முகவரியை அணுகலாம். சிங்கப்பூரர்கள் உயர்கல்வி படிப்பை மேற்கொள்ள விரும்பும் நாடுகளில் பிரிட்டன் பிரபலமானது.
பிரிட்டனில் படிக்கும் சிங்கப்பூரர்கள் நாடு திரும்ப அரசாங்கம் உதவி
1 mins read
மாணவர்கள் இம்மாதம் சிங்கப்பூருக்குத் திரும்பிட போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் எஸ்ஐஏ நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பதிவுசெய்துகொள்ள விரும்புவோர் go.gov.sg/flyinghome2020 என்ற இணைய முகவரியை அணுகலாம். சிங்கப்பூரர்கள் உயர்கல்வி படிப்பை மேற்கொள்ள விரும்பும் நாடுகளில் பிரிட்டன் பிரபலமானது. படம்: இபிஏ -

