உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அடைக்கப்பட்டிருக்கும் தேவாலயத்தில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆசிய நாகரிக அரும்பொருளகமும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அரும்பொருளகம் மூடப்பட்டது.
கிருமித்தொற்று பாதிப்பு: மூடப்பட்ட தேவாலயம், அரும்பொருளகம்
1 mins read
படம்: இபிஏ -

