தடைக்காப்பு ஆணை, கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளை சிங்கப்பூர் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், கிருமித்தொற்று சம்பவங்கள் இந்நேரம் 5,000க்கும் மேலாகியிருக்கலாம் என்று என்யுஎசை சேர்ந்த இணைப் பேராசிரியிர் அலெக்ஸாண்டர் குக் கூறியுள்ளார். சாதாரண சளிக்காய்ச்சலை விட எளிதில் பரவக்கூடியது கொவிட்-19 என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் கிருமியை வெல்வதற்கு அரசாங்கமும் மக்களின் சமூகப் பொறுப்புணர்வும் தேவை என்று திரு குக் குறிப்பிட்டார்.
'கடுமையான நடவடிக்கைகளின்றி 5,000ஐ எட்டியிருப்போம்'
1 mins read
சிங்கப்பூரில் நேற்று மேலும் இரு புதிய கிருமி தொற்றியுள்ளதாகவும் நால்வர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: எஸ்டி கோப்புப்படம் -

