‘பொருளியல் மந்தநிலை தவிர்க்க முடியாதது’

சிங்­கப்­பூ­ரில் பொரு­ளி­யல் மந்­த­நிலை தவிர்க்க முடி­யா­தது எனக் கூறிய டிபி­எஸ் வங்கி, இவ்­வாண்டு பொரு­ளி­யல் 0.5 விழுக்­காடு சுருங்­கும் என முன்­னு­ரைத்­துள்­ளது. கடந்த மாதம் முன்­னு­ரைக்­கப்­பட்ட 0.9 விழுக்­காடு வளர்ச்­சி­யைக் காட்­டி­லும் இது நேர்மாறானது.

கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் மேலும் மோச­ம­டைந்­தால் பொரு­ளி­யல் மேலும் மந்­த­ம­டை­யும் அபா­யம் இருப்­ப­தாக அந்த வங்­கி­யின் பொரு­ளி­யல் நிபு­ணர் எர்­வின் சியா, தமது ஆய்வு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இவ்­வாண்­டின் மொத்த ஆட்­கு­றைப்­பின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 24,500ஐ எட்­டும் என்று அவர் எதிர்­பார்க்­கி­றார். இந்த எண்­ணிக்கை, அனைத்­து­லக நிதி நெருக்­கடி சம­ய­மான 2009ல் இருந்த 23,430ஐ காட்­டி­லும் அதி­கம்.

“உல­கின் பல்­வேறு பகு­தி­களில் நில­வும் அம­ளி­யை­யும் வர்த்­த­கம், முத­லீடு, பய­ணம் ஆகி­ய­வற்­றின் மீதான கட்­டுப்­பா­டு­க­ளை­யும் கருத்­தில்­கொள்­ளும்­போது இது சுய­மாக உண்­டாக்­கப்­பட்ட உல­க­ளா­விய பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யைப் போல உள்­ளது.

“சிறிய, வெளிப்­ப­டைத்­தன்­மை­யான பொரு­ளி­ய­லைக் கொண்ட சிங்­கப்­பூர் இதி­லி­ருந்து தப்ப முடி­யாது,” என்­றார் திரு சியா.

$14 பில்­லி­யன் முதல் $16 பில்­லி­யன் வரை­யில் மதிப்­பிலான இரண்­டா­வது ஆத­ர­வுத் திட்­டம் அறி­விக்­கப்­ப­ட­லாம் என்று திரு சியா கூறி­னார்.

இதற்கு முன் நிலைத்­தன்மை மற்­றும் ஆத­ர­வுக்­கான 4 பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான திட்­டம் கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்ட வர­வு­செ­லவு திட்ட அறிக்­கை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

குறை­யும் பண­வீக்­கம், பொரு­ளி­யல் மந்­தத்­திற்­கான அபா­யம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மேலும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்­தும் என திரு சியா எதிர்­பார்க்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!