வேலைகளைக் காக்க ஊழியர் மறுபயிற்சியில் ஒருமித்த கவனம்

வேலைகளைக் காக்க ஊழியர் மறுபயிற்சியில் ஒருமித்த கவனம்

2 mins read
f44f02f8-a1c9-4261-943d-537841bf80d6
கோப்புப்படம்: எஸ்டி -

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் வேலை வாய்ப்­பு­கள் குறைந்­தன. இருந்­தா­லும் வளர்ச்சி அடைந்து வரும் துறை­களில் இன்­ன­மும் பல வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்து இருக்­கி­றார்.

ஆயி­னும் கொரோனா கிரு­மித்­தொற்று சூழ­லில் நிச்­ச­ய­மில்­லாத நிலை தொட­ரும் என்­ப­தால் வேலை வாய்ப்­பு­கள் மேலும் குறை­யக்­ கூடும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

முத­லா­ளி­க­ளி­டையே ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கும் ஆர்­வம் குறைந்து இருக்­கிறது. இதன் விளை­வாக வேலை தேடு­வோர் மேலும் சவால்­மிக்க காலத்தை எதிர்­நோக்­கு­வார்­கள் என்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் திரு­வாட்டி டியோ தெரி­வித்­துள்­ளார்.

மனி­த­வள அமைச்சு 2019 வேலை வாய்ப்­பு­கள் பற்­றிய அறிக்­கையை நேற்று வெளி­யிட்­டது. அது பற்றி அமைச்­சர் கருத்து கூறி­னார். நிச்­ச­ய­மில்­லாத நிலை­யில் பொரு­ளி­யல் இருந்­தா­லும் முத­லா­ளி­கள் தொழில்­களை விரிவு ­ப­டுத்­து­வ­தன் மூல­மா­க­வும் உரு­மாற்­று­வ­தன் வழி­யா­க­வும் புதிய வேலை­களை உரு­வாக்கி வரு­கி­றார்­கள் என்று அந்த அறிக்கை குறிப்­பிட்டு உள்­ளது.

சென்ற செப்­டம்­ப­ரில் 52,900 வேலை வாய்ப்­பு­கள் இருந்­தன. அவற்­றில் மொத்­தம் 42 விழுக்­காடு முத­லா­ளி­கள் உரு­வாக்­கி­ய­தா­கும். இந்த ஆண்­டைப் பொறுத்­த­ வ­ரை­யில், கூடு­மா­ன­வ­ரை­யில் அதி­க­மான ஊழி­யர்­கள் தங்­கள் வேலை­களில் நிலைத்து இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் ஒரு­மித்த கவ­னம் இடம்­பெற வேண்­டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதில் பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்­குப் பொருத்­த­மான வேலை­யைப் பெற்று தர முடி­யும் என்­றும் அவர் கூறி­னார். வேலை­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் பாது­காப்­பதே சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்ட $4 பில்­லி­யன் நிலைப்­பாடு மற்­றும் ஆத­ரவு திட்­டத்­தின் மிக முக்­கிய நோக்­கம் என அவர் சுட்­டி­னார்.

கட்­டு­மா­னம், தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்­பம், பாது­காப்பு மற்­றும் புலன்­வி­சா­ரணை ஆகிய துறை­களில் சென்ற ஆண்­டில் புதிய வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­ன­தாக மனி­த­வள அமைச்­சின் அறிக்கை குறிப்­பி­டு­கிறது. அந்த அறிக்கை, சுமார் 15,300 தனி­யார் மற்­றும் பொதுத்­துறை அமைப்­பு­களை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்ட ஆய்வை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது.

நிபு­ணத்­து­வச் சேவை­கள், நிதி மற்­றும் காப்­பு­று­திச் சேவை­கள், மொத்த வர்த்­த­கம், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஆகிய தொழில்­து­றை­களும் வளர்ச்சி கண்டு வரு­வ­தாக அர­சாங்­கம் அடை­யா­ளம் கண்டு இருக்­கிறது. தொழில்­து­றைச் சூழல் மெது­வாக இருக்­கை­யில் அர­சாங்­கம் முத­லா­ளி­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு ஊழி­யர்­க­ளுக்­குப் புதிய தேர்ச்­சி­நி­லையை அளித்து அவர்­க­ளைப் புதிய வேலை­க­ளுக்­குத் தயார்­ப்ப­டுத்த விரும்­பு­வ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.