மின்-ஸ்கூட்டர் ஓட்டுநரை அதிகாரி உதைத்தாக பரவும் பொய்ச் செய்தி

மின்-ஸ்கூட்­டர் ஓட்­டிய ஒரு­வரை அம­லாக்­கப் பிரிவு அதி­காரி எட்டி உதைத்­த­தாக பொய்ச் செய்தி பர­வு­வ­தா­க­வும் போலி­சார் அது குறித்து விசா­ரித்து வரு­வ­தா­க­வும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

ஓர் அம­லாக்­கப் பிரிவு அதி­காரி, அரு­கில் ஓர் ஆட­வர் விழுந்து கிடப்­பது ஆகி­ய­வற்­றைக் காட்­டும் புகைப்­ப­டங்­க­ளு­டன் இந்த பொய்­யான குற்­றச்­சாட்டு சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கிறது.

சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் நிகழ்ந்­த­தா­கச் சொன்ன ஆணை­யம், சம்­ப­வம் பற்றி இணை­யத்­தில் பர­வும் தக­வ­லைச் சுட்டி, “கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத ஒன்று, பொய்,” என்று குறிப்­பிட்­டது.

ஈசூ­னில் விதி­மு­றை­களை மீறி­ய­தாக அமைந்த மின்-ஸ்கூட்­டர் ஒன்றை நடை­பா­தை­யில் ஒரு­வர் ஓட்­டிச் சென்­றதை ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் கண்­ட­னர்.

வண்­டியை நிறுத்­து­மாறு அதி­கா­ரி­கள் சைகை செய்­த­தற்­குப் பணி­யா­மல் மின்-ஸ்கூட்­டர் ஓட்டி தப்பி ஓட முயற்சி செய்­தார். அப்­போது கட்­டுப்­பாட்டை இழந்து தடு­மாறி வண்­டி­யி­லி­ருந்து விழுந்­தார் என்று ஆணை­யம் விளக்­கம் அளித்­தது.

“அந்த ஆட­வ­ரின் தக­வல்­களை அதி­கா­ரி­கள் பெற்­றுக்­கொண்ட சம­யம், அவர் மீண்­டும் தப்­பி­யோட முயற்சி செய்­தார். அப்­போது மற்­றோர் அதி­காரி அந்த ஆட­வர் ஓடி­வி­டா­மல் பிடித்­தார். அந்த நட­வ­டிக்­கை­யில் இரு­வ­ரும் கீழே விழுந்­த­னர்,” என்­றது ஆணை­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!