கிருமித்தொற்றால் இருவர் உயிரிழப்பு

கிருமித்தொற்றால் இருவர் உயிரிழப்பு

3 mins read
6caa06cc-ed4c-4bb8-bf35-c9ca66380575
சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் நேற்­றுக் காலை மர­ண­ம் அடைந்­த­னர். கொரோனா தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் முதன்முதலில் பதி­வான மர­ணங்­கள் இவை­தான். படம்: எஸ், டெஸ்மண்ட் ஃபூ -

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் நேற்­றுக் காலை மர­ண­ம் அடைந்­த­னர். கொரோனா தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் முதன்முதலில் பதி­வான மர­ணங்­கள் இவை­தான்.

நாட்­பட்ட இதய நோய் மற்­றும் உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சி­னை­கள் இருந்த 75 வயது சிங்­கப்­பூர் மூதாட்டி ஒரு­வர் நேற்­றுக் காலை 7.52 மணிக்கு உயி­ரி­ழந்­தார்.

நிமோ­னியா பிரச்­சி­னை­யால் கடந்த மாதம் 23ஆம் தேதி அப்­பெண்­மணி தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு மையத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அதே நாளி­லேயே கிரு­மித்­தொற்­றா­லும் அவர் பாதிக்­கப்­பட்டிருந்­தது உறு­தி­செய்­யப்­பட்­டது. 26 நாட்­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்த பிறகு அவ­ரது உயிர் பிரிந்­த­தாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை கூறுகிறது.

அந்­தப் பெண்­மணி, சிங்­கப்­பூரில் கிருமி தொற்­றிய 90வது ஆள். பாய லேபா­ரில் உள்ள 'தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்­கப்­பூர்' தேவா­ல­யத்­து­டன் இவ­ருக்­குத் தொடர்­பி­ருந்­தது. அந்த சமய வழி­பாட்­டுத் தலத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­களில் இது­வரை பத்­துப் பேரை கிருமி தொற்­றி­விட்டது.

கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் மாண்­டு­போன இரண்­டா­ம­வர் 64 வயது இந்­தோ­னீ­சி­யர். இம்­மா­தம் 13ஆம் தேதி இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய அவர், மோச­மான உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக அன்­றைய நாளே தொற்­று­நோய்த் தடுப்பு மையத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அதற்கு மறு­நாள் அவ­ரை­யும் கிருமி தொற்­றி­யி­ருந்­ததை மருத்­து­வச் சோத­னை­கள் உறு­திப்­ப­டுத்­தின. ஒன்­பது நாட்­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்த அவர் நேற்­றுக் காலை 10.15 மணிக்கு மர­ணத்­தைத் தழு­வி­னார்.

இங்கு வரு­வ­தற்­கு­முன், நிமோ­னி­யா­வுக்­காக இந்­தோ­னீ­சிய மருத்­து­வ­ம­னை­யில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டு, சிகிச்சை பெற்­றார். அவ­ருக்கு இதய நோய் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

"இரு­வ­ரின் மர­ணத்­தால் வருத்­தம் அடைந்­துள்­ளோம். இந்­தச் சிர­ம­மான நேரத்­தில் அவர்­க­ளது குடும்­பங்­களை எண்ணி மனம் வாடு­கி­றோம். அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­குத் தேவை­யான உதவி­களைச் செய்­வோம்," என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

இரு­வ­ரின் மர­ணச் செய்தி சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் துய­ரி­னில் ஆழ்த்தி இருக்­கும் என்­பதை அறிந்­துள்­ள­தா­கக் கூறிய அமைச்­சர் கான், ஆனாலும் துணிச்­ச­லு­டன் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் தொடர்ந்து பங்­காற்­றும்­படி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

மக்­கள் தங்­க­ளுக்கு இடையே பாது­காப்­பான இடை­வெளி உட்­பட அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்­கும்­படி திரு கான் வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, மாண்ட இரு­வரின் குடும்­பத்­தா­ருக்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக்­கொண்­டுள்­ளார். அத்­து­டன், இது­நாள் வரை அவ்­வி­ரு­வ­ரை­யும் அக்­க­றை­யு­டன் கவ­னித்­துக்­கொண்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களை அவர்­களின் மர­ணம் துய­ரி­னில் ஆழ்த்தி இருக்­கும் எனக் குறிப்­பிட்­டுள்ள அதி­பர் ஹலிமா, ஆனா­லும் அந்த ஊழி­யர்­கள் மனந்­த­ளர்ந்­து­வி­டக்­கூ­டாது என்­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அதேபோல, மர­ண­ம­டைந்த இரு­வ­ரின் குடும்­பத்­தா­ருக்­கும் தமது ஆழ்ந்த இரங்­கல்­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில், அதி­க­மான நோயா­ளி­க­ளுக்­குத் தீவிர சிகிச்­சைப் பிரி­வின் பரா­மரிப்பு தேவைப்­ப­ட­லாம். அதே வேளை­யில், அதி­க­மான உயி­ர் இ­ழப்­பு­களை எதிர்­கொள்­ள­வும் நாம் தயா­ராக இருக்­க­வேண்­டும்," என்று பிர­த­மர் லீ கூறி­யுள்­ளார்.

தங்­க­ளு­டைய நோயா­ளி­களை நன்கு கவ­னித்­துக்­கொள்ள தங்­களால் ஆன அனைத்­தை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் செய்து வரு­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டுள்­ளார்.

"கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் நேற்று முன்­தி­னம் வரை 135 பேர் குண­ம­டைந்து வீடு திரும்பி­விட்­ட­னர். இன்­னும் பலர் படிப்­படி­யா­கத் தேறி வரு­கின்­ற­னர். கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க அர­சாங்­கம் அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுத்து வரு­கிறது. ஆனா­லும், அதற்கு ஒவ்­வொ­ரு­வ­ரின் ஆத­ர­வும் தேவை. அனை­வ­ரும் கட்­டுப்­பாட்டு நடை­மு­றை­க­ளுக்கு இணங்கி நடக்க வேண்­டும்," என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

நம்மை, நம் குடும்­பங்­களை, நம் நாட்­டைப் பாது­காக்க வைத்­தி­ருக்க நாம் எல்­லா­ரும் இணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்­றும் பிர­த­மர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.