கொரோனா பாதிப்பு 432ஆக உயர்ந்தது

கொரோனா பாதிப்பு 432ஆக உயர்ந்தது

1 mins read
f31513a8-c139-48c1-8522-f730d6fdec32
சிங்கப்பூரில் நேற்று மேலும் இரு புதிய கிருமி தொற்றியுள்ளதாகவும் நால்வர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: எஸ்டி கோப்புப்படம் -

வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்த 39 பேர் உட்­பட மேலும் 47 பேரை கொரோனா தொற்­றி­ இருப்பது நேற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 432ஆக அதி­க­ரித்­துள்­ளது. உடல்­ந­லம் தேறிய ஒன்பது பேர் நேற்று மருத்­து­வ­மனையைவிட்டு வெளி­யே­றி­னர். அவர்­க­ளு­டன் சேர்த்து இது­வரை மொத்­தம் 140 பேர் மருத்­து­வ­மனை­களில் இருந்து வீடு திரும்பி­விட்டனர். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்ள 14 பேர் உட்­பட இன்னும் 290 பேருக்­குச் சிகிச்சை தொடர்­கிறது.