'கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் கோவிலில் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறலாம்'

'கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் கோவிலில் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறலாம்'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரம் மோச­ம­டைந்து வரும் வேளை­யில் சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் கிருமி பர­வா­தி­ருப்­ப­தற்­கான முக்­கிய வழி­காட்­டி­களை வெளி­யிட்­டது. அவற்­றில் ஒன்­றாக, 250க்கும் மேற்­பட்­டோர் ஒன்­று­கூ­டும் எல்லா நிகழ்ச்­சி­களும் ஜூன் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் தொடர்­பில் ஏற்­கெ­னவே இம்­மா­தம் முதல் கோவில்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட திரு­ம­ணங்­கள் பாதிக்­கப்­ப­டுமா என்று தமிழ் முரசு இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தி­ட­மும் தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவில் நிர்­வா­கத்­தி­ட­மும் விளக்­கம் கேட்­டது. புதிய விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­கை­யில், கோவில் திரு­ம­ணங்­கள் தொடர்ந்து தங்­க­ளது வளா­கத்­தில் நடை­பெ­ற­லாம் என்று இருத்­த­ரப்­பி­ன­ரும் தெரி­வித்­த­னர். ஆனால் தங்­க­ளது விருந்­தி­னர் பட்­டி­யலை 250 ஆகக் குறைப்­ப­தற்­குத் தம்­ப­தி­யி­னர் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர். உதா­ர­ணத்­திற்கு, ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் பிஜிபி கல்­யாண மண்­ட­பத்­தில் எந்­நே­ர­மும் ஒரு மாடி­யில் 250க்கும் மேற்­பட்­டோர் கூடா­மல் இருப்­பது கண்­கா­ணிக்­கப்­படும். அதோடு அங்கு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் போதிய இடை­வெளி இருப்­பதை உறு­தி­செய்­யும் நோக்­கில் கல்­யாண மண்­ட­பத்­தில் அம­ரும் இருக்­கை­களில் இடை­வெளி இருக்­கும். சில இருக்­கை­களில் அம­ரக்­கூ­டாது என்ற ஒட்­டு­வில்­லை­கள் ஒட்­டப்­பட்­டி­ருக்­கும். இதற்கு மேலாக உணவு மண்­ட­பத்­தில் ஒவ்­வொரு மேசை­யின் இடை­வெளி அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தோடு அதி­க­பட்­ச­மாக ஆறு நாற்­கா­லி­கள் மட்­டுமே ஒவ்­வொரு மேசை­யி­லும் இருக்­கும். தம்­ப­தி­யி­னர் தங்­க­ளது திரு­ம­ணத்­தைத் தள்­ளி­வைப்­ப­தாக இருந்­தால் அதற்­குக் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த தேவை­யில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. நேற்று அதன் வளா­கத்­தில் நடந்த திரு­ம­ணங்­கள் புதிய விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு சுமு­க­மாக நடந்­தே­றி­ய­தாக தேங் ரோடு கோயி­லின் நிர்­வா­கக் குழு தலை­வர் திரு வீ.ஆர்.விஸ்­வ­நா­தன் குறிப்­பிட்­டார். உடல் வெப்­ப­நி­லை­யைச் சோதித்­தல் போன்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் ஏற்­கெ­னவே நடப்­பில் உள்­ள­தாகவும் அவர் சொன்­னார். இன்று அக்­கோ­யில் கல்­யாண மண்­டப வளா­கத்­தில் ஒரு திரு­ம­ணம் நடக்க வேண்­டி­ய­தாக இருந்­தது. ஆனால் அத்­தி­ரு­ம­ணத்தை ஏற்­பாடு செய்த தம்­ப­தி­யி­னர் அதனை இன்­னொரு நாளுக்கு ஒத்­தி­வைக்க முடி­வெ­டுத்­துள்­ள­னர். "அவர்­கள் கிட்­டத்­தட்ட 600 விருந்­தி­னர்­களை அழைத்­தி­ருந்ததால் கடைசி நிமி­டத்­தில் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது சாத்­தி­யம் இல்லை என்­றார்­கள். ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளியை நிலை­நாட்­டு­வ­தும் சிரமமாக இருக்­கும் என்று பகிர்ந்து­ கொண்­ட­னர்," என்­றார் திரு விஸ்­வ­நா­தன். இதற்கிடையே புதிய விதி­மு­றை­கள் குறித்து, தங்­க­ளது வளா­கத்­தில் திரு­மணம் செய்ய பதி­வு­செய்­தி­ருக்­கும் தம்­ப­தி­க­ளுக்கு அக்­கோ­யில் நிர்­வா­கம் மின்­னஞ்­சல் வழி­யா­க­வும் தொலை­பேசி வழி­யா­க­வும் தொடர்­பு­கொண்டு தெரி­வித்து வரு­கிறது.