வூஹானிலேயே இருந்து உதவி செய்த சிங்கப்பூரர்

வூஹானிலேயே இருந்து உதவி செய்த சிங்கப்பூரர்

1 mins read
95713aef-f219-4446-9964-73c0c0bf1d95
கிருமித் தொற்று ஆபத்து இருந்தும் வூஹானை விட்டு வெளி யேறாமல் தமது குடியிருப்பில் இருந்த விருந்தி னர்களுக்கு உதவிய ஜான் பெங். படம்: திரு ஜான் பெங் -

சீனா­வின் வூஹான் நக­ரில்­தான் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடங்­கி­யது. அங்கு பல­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு உயி­ரி­ழப்­பு­கள் அதி­க­ரித்­ததை அடுத்து அங்­கி­ருந்து சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் வெளி­யே­றி­னர். ஆனால் சிங்­கப்­பூ­ர­ரான 44 வயது திரு ஜான் பெங் வூஹா­னை­விட்டு வெளி­யே­ற­வில்லை.

மாறாக, வூஹா­னில் ஃபிரேசர்ஸ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான மொடேனா பை ஃபிரேசர்ஸ் எனும் தனி­யார் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் தலைமை நிர்­வா­கி­யான திரு பெங், அங்­கேயே இருந்து அங்கு வசித்த விருந்­தி­னர்­க­ளைக் கவ­னித்­துக்­கொண்டு வரு­கி­றார்.

சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பு­மாறு அவ­ரது முத­லா­ளி­யும் குடும்­பத்­தி­ன­ரும் கேட்­டுக்­கொண்­ட­போ­தி­லும் அவர் வூஹா­னிலே இருக்­கி­றார். இந்­நி­லை­யில், காணொளி அழைப்பு மூலம் அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசி­னார்.

"எனக்கு ஒரே ஓர் இலக்கு மட்­டுமே இருந்­தது. குடி­யி­ருப்­பில் இருந்த அனைத்து விருந்­தி­னர்­களும் ஊழி­யர்­களும் பாது­காப்­பாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் எனது முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. உணவு பற்­றாக்­குறை ஏற்­பட்­டால் என்­ன­வா­கும்? விருந்­தி­னர்­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் பார்த்­துக்­கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்­ததை பாக்­கி­ய­மா­கக் கரு­து­கி­றேன்," என்று திரு பெங் தெரி­வித்­தார்.

அந்­தக் குடி­யிருப்­பில் வசித்த 90 பேரில் பலர் தற்­போது வூஹா­வை­விட்டு வெளி­யே­றி­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திரு பெங்­கின் மனை­வி­யும் அவ­ரது மூன்று வயது மக­னும் வூஹா­னி­லி­ருந்து திரும்­பி­விட்­ட­னர். ஆனால் வூஹா­னை­விட்டு வெளி­யே­றும் திட்­டம் தமக்கு இல்லை என்று திரு பெங் தெரி­வித்­துள்­ளார்.