அத்தியாவசியப் பொருட்கள்: தொடர்ந்து பெற நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்கள்: தொடர்ந்து பெற நடவடிக்கை

1 mins read
fdabdd90-e3b0-42ae-a683-d19b0fe95d4f
நியூ­சி­லாந்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் தொடர்ந்து அனுப்­பப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதைத் தொடர இரு­நா­டு­களும் கடப்­பாடு கொண்­டுள்­ளன.  படம்: எஸ்டி, ஓங் வீ ஜின் -

கொரோனா கிரு­மித்­தொற்று மோச­ம­டைந்து வரும் வேளை­யில் நியூ­சி­லாந்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் தொடர்ந்து அனுப்­பப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதைத் தொடர இரு­நா­டு­களும் கடப்­பாடு கொண்­டுள்­ளன.

இதற்கு ஏது­வாக நடப்­பில் இருக்­கும் வர்த்­த­கக் கட்­டுப்­பா­டு­களை நீக்க இரு­நா­டு­களும் இணைந்து செயல்­பட இருக்­கின்­றன.

வர்த்­தக இடை­யூ­று­களை அடை­யா­ளம் கண்டு அவற்றை எதிர்­கொள்ள இரு­நா­டு­களும் மிக அணுக்­க­மா­கச் செயல்­படும் என்று சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங்­கும் நியூ­சி­லாந்­தின் வர்த்­தக, ஏற்­று­மதி வளர்ச்சி அமைச்­சர் டேவிட் பார்க்­க­ரும் கூட்­ட­றிக்கை மூலம் தெரி­வித்­த­னர்.

தடை­யில்லா வர்த்­த­கம் இரு­நா­டு­க­ளுக்­கும் பல­னைத் தரும் என்று இரு அமைச்­சர்­களும் கூறி­னர்.

கொரோனா கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்­ததை அடுத்து உல­கெங்­கும் வர்த்­த­கங்­கள் தடைப்­பட்­டுள்­ளன.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வருவதில் எவ்­வித பாதிப்­பு­ம் இல்லை என அமைச்­சர் சான் பல­முறை தெரி­வித்­துள்­ளார். இருப்­பில் உள்ள அத்­தி­யா­வ­சிப் பொருட்­களை அதி­க­ரிப்­பது, குறிப்­பிட்ட சில நாடு­களை மட்­டும் நம்­பி­யி­ருக்­கா­மல் மேலும் பல நாடு­க­ளி­லி­ருந்து அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கு­வது ஆகி­யவை தொடர்­பான சிங்­கப்­பூர் மறு­ஆய்வு செய்து வரு­வ­தாக அவர் இம்­மா­தம் துவக்­கத்­திவ் தெரி­வித்­தி­ருந்­தார்.