ஓய்வு நாட்களில் பணிப்பெண்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது: அமைச்சு

2 mins read
cfbf5c92-ede2-4beb-b1e6-c6241552efcf
சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் பணிப்­பெண்­கள் தங்­கள் ஓய்வு நாட்­களில் வீட்­டி­லேயே இருப்­பது நல்­லது என்று மனி­த­வள அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் பணிப்­பெண்­கள் தங்­கள் ஓய்வு நாட்­களில் வீட்­டி­லேயே இருப்­பது நல்­லது என்று மனி­த­வள அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கருத்­தில் கொண்டு அமைச்சு இவ்­வாறு கூறி­யுள்­ளது.

அப்­ப­டியே ஓய்வு நாட்­களில் பணிப்­பெண்­கள் வெளியே சென்­றா­லும் மற்­ற­வர்­க­ளு­ட­னான தூர இடை­வெ­ளியை அவர்­கள் அதி­க­ரிக்க வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.

"சொந்த பணி­கள் கார­ண­மாக வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­கள் வெளியே செல்­லும் தேவை ஏற்­பட்­டால் ஓய்வு நாட்­களை வார­நாட்­களில் எடுத்­துக்­கொள்­வது நல்­லது. அப்­போ­து­தான் பொது இடங்­களில் கூட்­ட­மாக இருக்­காது.

"வார நாட்­களில் வீட்­டி­லேயே இருக்க பணிப்­பெண்­கள் இணங்­கி­னால் அந்த நாட்­களில் முத­லா­ளி­கள் அவர்­களை வேலை செய்ய சொல்­லக்­கூ­டாது.

"ஓய்வு நாட்­கள் வேண்­டாம் என்று கூறி வேலை செய்­யும் பணிப்­பெண்­க­ளுக்கு அதற்­கான ஊதி­யத்தை முத­லா­ளி­கள் கொடுக்க வேண்­டும்," என்று அமைச்சு கூறி­யது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இடை­யி­லான தூர இடை­வெ­ளியை அதி­க­ரிக்­கும் அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

"மற்­ற­வர்­க­ளுக்கு மிக அரு­கில் இருப்­பது, கும்­பல்­க­ளாக இருப்­பது போன்­ற­வற்­றைத் தவிர்க்க இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்சு தெரி­வித்­தது.

ஓய்வு நாட்­களில் வெளியே செல்­லும் பணிப்­பெண்­கள் லக்கி பிளாசா, சிட்டி பிளாசா, பெனின்­சுலா பிளாசா போன்ற இடக்­களில் கூடு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று அமைச்சு கூறி­யது.

அது­மட்­டு­மல்­லாது, சுகா­தா­ர­மிக்க பழக்­க­வ­ழக்­கங்­க­ளைப் பணிப்­பெண்­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் மற்­ற­வர்­க­ளு­டன் உணவு, பானம் போன்­ற­வற்­றைப் பகிர்ந்­து­கொள்ள வேண்­டாம் என்றும் அமைச்சு கூறி­யது.

"பணிப்­பெண்­கள் பொறுப்­பு­டன் இருந்து தங்­கள் உடல்­ந­லத்­தைக் கண்­கா­ணித்­துக்­கொள்ள வேண்­டும். நோய்வாய்ப்பட்டால் மருத்­து­வ­ரி­டம் செல்ல வேண்­டும். நோய்­வாய்ப்­பட்­டால் வெளியே செல்­லக்­கூ­டாது. கிரு­மிப் பர­வலை இது தடுக்­கும்," என்று அமைச்சு கூறி­யது.