'வெளிநாடு செல்வோர் விளைவுகளை சந்திப்பர்'

'வெளிநாடு செல்வோர் விளைவுகளை சந்திப்பர்'

2 mins read
e1a208db-65d6-4ae2-bff3-385d67aead36
கடந்த திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வீட்டிலேயே இருக்கும்படி 7,000க்கும் மேற்பட்டோருக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

பய­ணம் தொடர்­பான அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் மீறி வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வோர் கூடிய விரை­வில் அதற்­கான விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்டி இருக்­கும் என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தெரி­வித்து உள்­ளது.

எல்­லைக்­கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருக்­கும் சம­யத்­தில் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­வோ­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் குறித்து அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­வ­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். "இதனை நாம் இனி­யும் அனு­ம­திக்­கக்­கூ­டாது. இதற்­குத் தேவை­யான கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் என்ன என்­பது பற்றி ஆலோ­சித்து வரு­கி­றோம்," என்­றார் அவர்.

மேலும், இப்­போது நில­வும் சூழ­லில் வேலை அனு­ம­திச் சீட்டு வைத்­தி­ருப்­போர் வெளி­நாடு சென்­றால் அவர்­கள் அதற்­கான விளை­வு­களை சந்­திப்­பார்­கள் என்­றும் மீண்­டும் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­மதி மறுக்­கும் நிலை வரும் என்­றும் திரு வோங் கூறி­னார்.

"மக்­கள் தங்­க­ளது பய­ணத்தைத் தொடர்­வ­தற்­கான கார­ணங்­கள் புரி­ய­வில்லை. தவிர்க்க முடி­யாத கார­ண­மாக இருந்­தால் சரி. இருப்­பி­னும் நாடு திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளால் கிரு­மி பர­வக்­கூ­டிய நிலையை இனி­யும் நாம் சந்­திக்க இய­லாது.

"இப்­போது வரை இதனை நாம் சகித்­துக்­கொண்டு உள்­ளோம். வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளால் அடுத்­த­டுத்து மூன்­றா­வது அல்­லது நான்­கா­வது என்று கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் உரு­வா­னால் அது நமக்கு மிகுந்த சவா­லாக அமைந்­து­வி­டும்," என்­றார் அவர்.

கடந்த வாரத்­தில் அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை என்று தெரியவந்­த­தைத் தொடர்ந்து அமைச்­சர் இவ்­வாறு கூறி­னார்.

அண்மை நாட்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் அறி­விக்­கப்­பட்ட புதிய நோயா­ளி­களில் பலர் ஐரோப்பா, வட அமெ­ரிக்கா, தென்­கி­ழக்கு ஆசியா மற்­றும் ஆசி­யா­வின் இதர பகு­தி­க­ளுக்­குச் சென்று திரும்­பிய சிங்­கப்­பூர்­வா­சி­கள் மற்­றும் நீண்­ட­கால அனு­மதி அட்­டை­தா­ரர்­கள்.