4000க்கும் மேற்பட்டோர் டெங்கியால் பாதிப்பு

4000க்கும் மேற்பட்டோர் டெங்கியால் பாதிப்பு

2 mins read
3ac0ba70-58ec-43c7-82ed-d60d9ff195f6
சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு 4,000க்கும் மேற்­பட்­டோர் டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.  படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரில் 4,000க்கும் மேற்­பட்­டோர் டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை இரு­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது.

வழக்­க­மாக ஜூன் மாதத்­துக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில்­தான் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்.

ஆனால் இம்­முறை அதற்கு முன்­பா­கவே டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இதற்­குப் பல கார­ணங்­கள் உள்­ளன. சிங்­கப்­பூ­ரில் வழக்­கத்­துக்கு மாறாக வெப்­ப­நிலை அதி­க­மாக இருப்­பது அதில் ஒன்­றா­கும். அது­மட்­டு­மல்­லாது, கூடு­தல் மழை­யின் கார­ண­மாக ஏடிஸ் வகை கொசுக்­க­ளின் இனப்­பெ­ருக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் அரிய வகை டெங்கி கிரு­மித்­தொற்­றும் அதி­க­ரித்­துள்­ளது.

"டெங்கி பாதிப்பு அதி­கம் ஏற்­படும் கால­கட்­டத்­துக்கு முன்­பா­கவே இந்­நோ­யி­னால் பலர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்த நிலை நம் அனை­வ­ருக்­கும் கவலை தரும் விஷ­ய­மாக இருக்­கிறது.

"அடுத்த சில மாதங்­களில் வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும். இத­னால் டெங்­கி­யால் பாதிப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும்," என்று அங் மோ கியோ­வில் நேற்று நடை­பெற்ற தேசிய டெங்கி தடுப்பு இயக்­கத்­தின் அறி­முக விழா­வில் சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இந்த வருடாந்திர இயக்கம் பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும்.

ஆனால் இவ்­வாண்டு நிலைமை மோச­மாக இருப்­ப­தால் அது முன்­கூட்­டியே தொடங்­கி­யுள்­ளது.

இவ்­வாண்டு தொடங்­கி­ய­தி­லி­ருந்து வாரத்­துக்கு 300லிருந்து 400 பேர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சிங்­கப்­பூ­ரில் தற்­போது டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள 100 குழு­மங்­கள் உள்­ளன.

அவற்­றில் 28 குழு­மங்­கள் மிக­வும் மோச­மான சிவப்பு விழிப்­பு­நிலை குழு­மங்­க­ளாக இருக்­கின்­றன. அந்­தக் குழு­மங்­களில் குறைந்­தது 10 பேருக்கு டெங்கி காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது.

ஜூரோங் வெஸ்ட் வட்­டா­ரத்­தின் சில பகு­தி­கள், அங் மோ கியோ அவென்யூ 10 ஆகிய வட்­டா­ரங்­கள் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கப்­பூ­ரில் கடந்த 30 ஆண்­டு­களில் டென்வி3- டெங்கி கிரு­மித்­தொற்­றால் அதிக பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்­ப­தால் அவ்­வகை கிரு­மிக்கு எதி­ரான எதிர்ப்பு சக்தி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு மிக­வும் குறை­வாக இருப்­ப­தாக அமைச்­சர் மச­கோஸ் கூறி­னார்.

இனி இந்த வகை டெங்கி கிரு­மித்­தொற்று அதி­க பாதிப்பை

ஏற்­ப­டுத்­துமா என்­பது குறித்து இன்­னும் உறு­தி­யா­கச் சொல்ல முடி­ய­வில்லை என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், நிலை­மையை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் மிக உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.