பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் கட்சிகள்

பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் கட்சிகள்

1 mins read
fb660fed-6bef-4610-b6d6-713ff610bfd0
பீஷான்-தோ பாயோ குழுத் தொகு­தி­யின் மக்­கள் செயல் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் முன்­னாள் ஜெனரல் திரு­வாட்டி  கான் சியாவ் ஹுவாங் நேற்று தொகுதி உலா­வில் கலந்­து­கொண்­டார். படம்: எஸ்டி, மார்க் சியோங் -

எதிர்­வ­ரும் பொதுத் தேர்­த­லுக்­காக கட்­சி­கள் தயா­ராகி வரு­கின்­றன.

பீஷான்-தோ பாயோ குழுத் தொகு­தி­யின் மக்­கள் செயல் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் முன்­னாள் ஜெனரல் திரு­வாட்டி கான் சியாவ் ஹுவாங் நேற்று தொகுதி உலா­வில் கலந்­து­கொண்­டார்.

பீஷான் நார்த்­தில் கடைத்­தொ­கு­திக்கு சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் அவர் காணப்­பட்­டார்.

அவ்­வட்­டா­ரத்­தில் உள்ள காப்­பிக்­க­டை­யில் அவர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

பீஷான் நார்த் வட்­டா­ரம் மேரி ­ம­வுண்ட் தனித்­தொ­கு­தி­யின் கீழ் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தெம்பனிஸ் குழுத் தொகுதி, செம்பவாங் குழுத் தொகுதி, பைனியர் தனித்தொகுதி, மெக்பர்சன் தனித்தொகுதி ஆகிய இடங்களில் போட்டியிடப் போவதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி நேற்று அறிவித்தது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் அக்கட்சியினர் நேற்று தொகுதி உலா நடத்தினர்.