எஸ்பிஎச்சின் மலேசிய ஊழியர்களுக்கு $30 படித்தொகை

எஸ்பிஎச்சின் மலேசிய ஊழியர்களுக்கு $30 படித்தொகை

1 mins read
612cd95b-7688-4664-8471-b4eb898ebacc
சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) நிறு­வ­னம் அதன் 25 மலே­சிய ஊழி­யர்­க­ளுக்கு பரி­வுத் திட்ட பொட்­ட­லங்­களை நேற்று முன்­தி­னம் வழங்­கி­யது. எஸ்­பி­எச்­சின் அச்­சுப் பிரி­வில் பணி­பு­ரி­யும் அந்த மலே­சிய ஊழி­யர்­க­ளுக்கு அந்­நி­று­வ­னத்­தின் துணைத் தலைமை நிர்­வாகி ஆண்­டனி டான் பரி­வுத் திட்ட பொட்­ட­லங்­களை வழங்­கி­னார். படம்: எஸ்டி, கெவின் ஃபூ -

சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் (எஸ்­பி­எச்) நிறு­வ­னம் அதன் 25 மலே­சிய ஊழி­யர்­க­ளுக்கு பரி­வுத் திட்ட பொட்­ட­லங்­களை நேற்று முன்­தி­னம் வழங்­கி­யது. எஸ்­பி­எச்­சின் அச்­சுப் பிரி­வில் பணி­பு­ரி­யும் அந்த மலே­சிய ஊழி­யர்­க­ளுக்கு அந்­நி­று­வ­னத்­தின் துணைத் தலைமை நிர்­வாகி ஆண்­டனி டான் பரி­வுத் திட்ட பொட்­ட­லங்­களை வழங்­கி­னார்.

பரி­வுத் திட்ட பொட்­ட­லங்­களில் அன்­றாட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளுக்­கான பற்­றுச்­சீட்­டு­கள், கிருமி நாசினி, பிஸ்­கட், மைலோ பொட்­ட­லங்­கள் இருந்­தன.

மலே­சி­யா­வில் இரண்டு வாரங்­க­ளுக்கு பகுதி முடக்­கம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து எஸ்­பி­எச்­சின் மலே­சிய ஊழி­யர்­களில் பலர் ஸ்டீ­வன்ஸ் சாலை­யில் உள்ள மெர்­கி­யோர் சிங்­கப்­பூர் ஹோட்­ட­லில் தங்கி வரு­கின்­ற­னர்.

"முடக்­கம் குறித்த அறி­விப்பு வெளி­யாகி குறு­கிய கால­கட்­டத்­தில் பல நாட்­க­ளுக்­குக் குடும்­பத்­தை­விட்­டுப் பிரிந்து வேலை­யைத் தொடர முடி­வெ­டுப்­ப­தும் அதற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­வ­தும் எளி­தான காரி­ய­மல்லை. எங்­கள் மலே­சிய ஊழி­யர்­க­ளின் தியா­கம் மிகப் பெரிது," என்­றார் திரு டான்.

இந்த ஊழி­யர்­க­ளுக்கு நாள்­தோ­றும் $30 படித்­தொகை வழங்க எஸ்­பி­எச் முடி­வெ­டுத்­துள்­ளது.