மாண்டோர் உடல்கள் விதிமுறைக்கு ஏற்ப கையாளப்படும்

மாண்டோர் உடல்கள் விதிமுறைக்கு ஏற்ப கையாளப்படும்

1 mins read
80055344-f868-4e04-b6c4-7cc4461f3955
கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மாண்ட இருவரின் உடல்கள் விதிமுறைக்கு ஏற்ப கையாளப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. படம்: எஸ்டி, அரிஃபின் ஜமார். -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் நேற்று முன்தினம் மாண்ட இருவரின் உடல்கள் விதிமுறைக்கு ஏற்ப கையாளப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி மருத்துவமனையைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இறுதிச் சடங்கிற்காக அந்த இருவரின் உடல்களையும் தயார் செய்வர்.

உடல்களுக்கான பைகளைக்கொண்டு இரண்டு முறை சுற்றிக்கட்டப்பட்டு காற்று நுழைய முடியாத சவப்பெட்டிகளில் உடல்கள் வைக்கப்படும்.

இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இறுதிச் சடங்குகளை நடத்துவோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் 250க்கும் குறைவானவர்களே கலந்துகொள்ளலாம். மேலும் ஒருவருக்கொருவர் இடையிலான தூர இடைவெளி தொடர்பான விதிமுறை பின்பற்றப்பட வேண்டும்.

சுகாதார அமைச்சுடன் கலந்து ஆலோசித்த பிறகு, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டோரின் உடல்களைக் கையாள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறையை கடந்த மாதம் 7ஆம் தேதியன்று இறுதிச் சடங்குகள் நடத்தும் நிறுவனங்களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் அனுப்பி வைத்தது.