இன்னோர் ஊக்குவிப்புத் திட்டத்துக்குக் கோரிக்கை

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கூடு­தல் ஆத­ரவை சிங்­கப்­பூர் வர்த்­த­கர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

இரண்­டா­வது பொரு­ளி­யில் ஊக்­கு­விப்­புத் திட்­டத்­துக்கு அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்த ஊக்­கு­விப்­புத் திட்­டம் இதற்கு முன் அறி­விக்­கப்­பட்­ட­தை­விட பெரி­தாக இருக்க வேண்­டும் என்று அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உல­கப் பொரு­ளி­யல் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தை அடுத்து உள்­ளூர் வர்த்­த­கர்­கள் இந்­தக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ள­னர்.

இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தைத் தாக்­கல் செய்­த­போது வர்த்­த­கங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க $4 பில்­லி­யன் பொரு­ளி­யல் ஊக்­கு­விப்­புத் தொகையை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் அறி­வித்­தார். இரண்­டா­வது பொரு­ளி­யல் ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தின் தொகை அதற்கு ஈடா­கவோ அல்­லது அதை­விட அதி­க­மா­கவோ இருக்க வேண்­டும் என்று இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம் நடத்­திய ஆய்­வில் பங்­கெ­டுத்த வர்த்­த­கர்­களில் 73 விழுக்­காட்­டி­னர் விரும்­பு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய ஊக்­கு­விப்­புத் தொகை உட­ன­டி­யா­கவோ அல்­லது ஒரு மாதத்­துக்­குள்­ளா­கவோ வழங்­கப்­பட வேண்­டும் என்று ஆய்­வில் பங்­கெ­டுத்த 188 வர்த்­த­கர்­களில் பாதி பேர் விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக சம்­மே­ள­னம் கூறி­யது.

அவர்­க­ளுக்கு அந்த நிதி அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­வதை இது காட்­டு­வ­தாக அது தெரி­வித்­தது.

ஆய்­வின் கண்­டு­பி­டிப்­பு­க­ளைத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் ஆகி­யோ­ரு­டன் சம்­மே­ள­னம் பகிர்ந்­து­கொண்­டது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சம்­மே­ள­னம் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் திரு ஹெங், திரு சான் ஆகி­யோ­ரு­டன் 40 வர்த்­த­கத் தலை­வர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!