பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1 mins read
da84d713-b929-4823-88bf-a4af7c44e117
பொங்கோல் கிரீன் தொடக்கப் பள்ளியில் தேர்வு நேரத்தில் அமர்வது போல வகுப்பறை களில் கூடுதல் இடைவெளி விட்டு அமர்ந்த மாணவர்கள். படம்: சாவ் பாவ் -

மார்ச் மாதப் பள்ளி விடு­மு­றைக்­குப் பிறகு மாண­வர்­கள் நேற்று பள்ளி திரும்­பி­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண­வர்­க­ளின் நலனை முன்­னிட்டு பள்­ளி­களில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. விடு­மு­றை­யின்­போது வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்ற மாண­வர்­கள் 14 நாட்­கள் கட்­டாய விடுப்­பில் உள்­ள­னர். வகுப்­ப­றை­யில் தேர்வு நேரத்­தில் அமர்­வதுபோல கூடு­தல் இடை­வெளி விட்டு மாண­வர்­கள் அமர்­கின்­ற­னர். அது­மட்­டு­மல்­லாது, பள்­ளி­யில் துப்­பு­ர­வுப் பணி­கள் அடிக்­கடி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பள்ளி உண­வ­கத்­தி­லும் விளை­யாட்டு மைதா­னங்­க­ளி­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.