பயணிகளுக்கான சுகாதார உறுதிமொழிப் படிவம்

பயணிகளுக்கான சுகாதார உறுதிமொழிப் படிவம்

1 mins read
8cc4e0d9-99c2-4186-9513-9fa2649f49eb
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 212. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்குள் வரும் அனைத்துப் பயணிகளும் குடிநுழைவுச் சோதனைக்கு முன்பு இணையம் வழி சுகாதார உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை வரும் 27ஆம் தேதி 9 மணியிலிருந்து நடப்புக்கு வரும்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால குடிநுழைவு அனுமதி வைத்திருப்போர் ஆகியோருக்கும் இது பொருந்தும்.

பொய்த் தகவல் அளிப்போருக்கு எதிராக தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.