சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா இடை­யி­ல் பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா இடை­யி­ல் பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

2 mins read
52b46cc7-0e7b-4628-8529-bd9a469c2379
காணொளி அழைப்பு மூலம் பேசிக்கொண்ட பிரதமர் லீ சியன் லூங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனும் திரையில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கைகுலுக்கிக்கொள்வதுபோல செய்கை செய்தனர். படம்: ஏஎஃப்பி -

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா இடை­யி­லான இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை அடுத்த நிலைக்­குக் கொண்டு செல்­லும் வகை­யில் நேற்று பத்து ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

இவற்­றில் தர­வுப் புத்­தாக்­கம், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஆகிய துறை­களும் அடங்­கும். சிங்­கப்­பூர் மற்­றும் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர்­க­ளின் வரு­டாந்­திர சந்­திப்பு இவ்­வாண்டு ஐந்­தா­வது முறை­யாக நடந்தது. கொரோனா கிரு­மித்­தொற்று அபா­யம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் நேரில் சந்­திக்­கா­மல் காணொளி அழைப்பு மூலம் தொடர்­பு­கொள்ள இரு­நாட்­டுத் தலை­வர்­களும் முடி­வெ­டுத்­த­னர்.

அதன்­படி ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சனை காணொளி அழைப்பு மூலம் பிர­த­மர் லீ சியன் லூங் தொடர்பு கொண்டு பேசி­னார்.

"இவ்­வாண்டு நான் ஆஸ்­தி­ரே­லி­யத் தலை­ந­கர் கேன்­ப­ரா­வுக்­குச் செல்ல வேண்­டி­ய­தாக இருந்­தது. ஆனால் கொரோனா கிரு­மித்­தொற்று உலக நாடு­க­ளுக்­குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தால் பய­ணத்தை ரத்து செய்ய வேண்­டி­ய­தா­யிற்று.

"ஆனால் கிரு­மித்­தொற்று கார­ண­மாக இரு­நாட்டு அதி­கா­ரி­

க­ளின் சந்­திப்பு தடைப்­ப­ட­வில்லை. இது எனக்கு மகிழ்ச்­சியை அளிக்­கிறது. இத்­த­கைய சூழ்­நி­லை­யில் நேரில் சந்­தித்­துக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டதை அடுத்து அதற்­குப் புத்­தாக்க முறை­யில் தீர்வு காணப்­பட்­டு­ள்­ளது. காணொளி அழைப்பு மூலம் தொடர்­பு­கொண்டு பேசி­னோம்," என்­றார் பிர­த­மர் லீ.

உல­கெங்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­போ­தி­லும் இன்­றைய மின்­னி­லக்­கச் சூழலில் அர­சாங்­கப் பணி­கள் தொட­ர­லாம் என்­ப­தற்கு இந்­தக் காணொளி ஆழைப்பு ஓர் உதா­ர­ணம் என்­றார் திரு லீ.

கொரோனா கிரு­மித்­தொற்று பெரும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­போ­தி­லும் இரு­த­ரப்பு நல்­லு­றவை மேலும் வலுப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் கடப்­பாடு கொண்­டுள்­ளதை இது காட்­டு­வ­தாக அவர் கூறி­னார்.

பிர­த­மர் லீயின் இந்தக் கருத்­து­களை ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் ஆமோ­தித்­தார். கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­களை அவர் பாராட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடை­யி­லான ராணு­வப் பயிற்­சித் தளம் தொடர்­பான புரிந்­து­ணர்­வுக் குறிப்பு ஒப்­பந்­த­மாக மேம்­ப­டுத்­தப்­பட்­டது.

புதிய ஒப்­பந்­தப்­படி ஷோல்­வாட்­டர் பே பயிற்­சித் தள­மும் புதிய கிரீன்­வேல் பயிற்­சித் தள­மும் விரி­வாக்­கப்­படும்.

இந்­தத் தளங்­க­ளுக்­கான விரி­வாக்­கப் பணி­கள் 2024ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வ­டை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இரு­த­ளங்­க­ளின் பரப்­ப­ளவு சிங்­கப்­பூ­ரை­விட பத்து மடங்கு பெரிது.

செயற்கை நுண்­ண­றிவு ஆற்றல் மற்றும் வர்த்­த­க­ம­ய­மாக்­கு­தல் போன்ற மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு தொடர்­பா­ன ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

இணை­யப் பாது­காப்பு, தர­வுப் புத்­தாக்­கம் போன்ற துறை­களில் இரு­நா­டு­களும் ஒன்­றி­ணைந்து செயல்­படும்.

கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பான பிரச்­சி­னையை சிங்­கப்­பூர் எதிர்­கொள்­ளும் விதம் குறித்து உலக நாடு­கள் பாராட்டி வரும் வேளை­யில் பிரச்­சினை

ஓய்­ந்து­விட்­டது என்று எண்ணி அர­சாங்­கம் மெத்­த­னத்­து­டன் இருக்­க­வில்லை என்­றார் பிர­த­மர் லீ. நிலை­மையை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"கொஞ்­சம் கவ­னம் சித­றி­னா­லும் மிக­வும் அபா­ய­க­ர­மான நிலை ஏற்­ப­டக்­கூ­டும். அத்­த­கைய நிலைமை நமக்கு எப்­போது வேண்டு மா­னா­லும் நிக­ழ­லாம்.

"கிடைத்­தி­ருக்­கும் ஆதா­ரங்­களை வைத்து கொரோனா கிரு­மித்­தொற்று நீண்­ட­கா­லத்­துக்­குத் தொட­ரும் என மக்­கள் எதிர்­பார்க்க வேண்­டும்," என்று பிர­த­மர் லீ எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.