வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் உள்ள மின்தூக்கியில் மாதைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது முகம்மது ஃபடில் ஓத்மானுக்கு இன்று (மார்ச் 24) பதினொன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அந்த ஆடவரிடமிருந்து தப்பிக்க அந்த மாது ஏழு நிமிடங்களாக போராடினார்.
சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்து ஐந்தே நாட்களில் ஆன நிலையில் அவருக்கு இந்த வன்கொடுமை இழைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது நார்த் பிரிட்ஜ் ரோட்டில் பின்னேரத்தில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த ஃபடில், அந்த மாது தனியாக நடந்து செல்வதைப் பார்த்தார்.
அதிகாலை 3.20 மணிக்கு அந்த மாதைப் பின்தொடர்ந்து அவர் வசிக்கும் புளோக்கின் மின்தூக்கிக்கு உள்ளே ஃபடில் புகுந்தார்.
மின்தூக்கி கதவு மூடிய உடனே அந்த மாதைப் பலவந்தமாக பிடித்து அவரை ஃபடில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இச்சம்பவம் மின்தூக்கியின் கண்காணிப்புக் கருவியில் பதிவானது. அதே நாள் இரவு 9.30 மணிக்கு ஃபடில் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
#குற்றம்


