லாரி ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான இந்தியருக்குச் சிறை

லாரி ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான இந்தியருக்குச் சிறை

2 mins read
91c9e2c3-7df1-4bd2-a2c8-3f3a730eb53e
2018ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தின் தொடர்­பில், திரு சிவ­கு­மார் பெரு­மா­ளு­டன் முன்பு பணி­யாற்­றிய 33 வயது சர­வ­ணன் அரி­மு­ரம் (படம்) மீது முத­லில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. தாம் கண்மூடித்தனமாக நடந்து­கொண்­டதை ஒப்­புக்­கொண்ட சர­வ­ண­னுக்கு ஓராண்டு, எட்டு மாத சிறைத் தண்­டனை நேற்று விதிக்­கப்­பட்­டது. படம்: எஸ்டி -

கன­ரக லாரி ஒன்­றில் ஏறிச் சென்ற ஓர் ஆட­வர், அந்த ஓட்­டு­ந­ரின் உற­வி­னர் ஒரு­வ­ரின் முது­கில் மிரு­கம் ஒன்­றின் கொம்­பு­க­ளால் குத்­தி­ய­தில் அந்த வாக­னம் விபத்­துக்­குள்­ளா­னது. ஓட்­டு­ந­ரான 43 வயது திரு சிவ­கு­மார் பெரு­மா­ளின் முகத்­தில் அந்த கொம்­பு­கள் இடித்­தன. திரு சிவ­கு­மா­ரின் இடது கண்­ணில் குத்­திய கொம்­பு­கள் அவ­ரது மூளை­யைத் துளைத்­த­தைத் தொடர்ந்து அவர் உயி­ரி­ழந்­தார்.

2018ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தின் தொடர்­பில், திரு சிவ­கு­மார் பெரு­மா­ளு­டன் முன்பு பணி­யாற்­றிய 33 வயது சர­வ­ணன் அரி­மு­ரம் (படம்) மீது முத­லில் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

தாம் கண்மூடித்தனமாக நடந்து­கொண்­டதை ஒப்­புக்­கொண்ட சர­வ­ண­னுக்கு ஓராண்டு, எட்டு மாத சிறைத் தண்­டனை நேற்று விதிக்­கப்­பட்­டது.

ஓடிக்­கொண்­டு இ­ருந்த கன­ரக வாக­னத்­தில் அந்த மிருகத்தின் கொம்­பு­களை ஆட­விட்ட சர­வ­ணன், ஓட்­டு­ந­ரான சிவ­கு­மாருக்கும் சாலையைப் பயன்­படுத்திய மற்றவர்களுக்கும் ஆபத்தை விளை­விக்­கும் வகை­யில் நடந்து­கொண்­டார்.

திரு சிவ­கு­மா­ரின் உற­வி­ன­ரான 18 வயது நவின் பார்த்­தி­ப­னைத் தாக்­கி­ய­தை­யும் சர­வ­ணன் ஒப்­புக்­கொண்­டார்.

அந்த கொம்­பு­க­ளின் நீளம் 40 சென்­டி­மீட்­டர் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், அந்தக் கொம்­பு­கள் எப்­படி அங்கு வந்­தன என்­ப­தைப் பற்றி எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­விலை.

2018 பிப்­ர­வரி 15ஆம் தேதி இந்­தச் சம்­ப­வம் நிகழ்­வ­தற்கு முன்­பாக, தேபான் கார்­டன்­சில் உள்ள புளோக் 53ன் கீழ்த்­த­ளத்­தில் இம்­மூ­வர் உள்ளிட்ட ஒரு குழு மது அருந்தி­ய­தாக அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

மாலை 5 மணி­ய­ள­வில் தமது உற­வி­ன­ரான நவீ­னு­டன் ஈசூ­னுக்கு செல்ல விரும்­பிய திரு சிவ­கு­மார், சர­வ­ண­னை­யும் உடன் அழைத்­துச் செல்ல சம்­ம­தித்­தார்.

கன­ரக வாக­னத்­தில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது சர­வ­ண­னு­டன் பேசிய அவ­ரது பெண் தோழி, அவரை தோ பாயோ­வில் சந்­திக்க விரும்­பி­னார். தன்னை தோ பாயோ­வில் இறக்­கி­விட முடி­யுமா என்று கேட்ட சர­வ­ண­னின் கோரிக்­கையை சிவ­கு­மார் நிரா­க­ரித்­தார். அத­னைத் தொடர்ந்து சிவ­கு­மா­ரு­டன் சரவணன் வாக்குவாதம் செய்ததை அடுத்து இந்த விபரீதம் நிகழ்ந்தது.