முக்கிய பேரங்காடிகளில் மூத்தோர், கர்ப்பிணிகள், உடற்குறையுள்ளோருக்கு வசதி

2 mins read
6cfe8699-c3c2-44ab-83e5-73ad4325eb82
சிங்கபபூரின் முக்கிய பேரங்­கா­டி­களில் அன்­றா­டப் பொருட்­களை வாங்க வரும் மூத்­தோர், கர்ப்­பி­ணி­கள், உடற்­கு­றை­யுள்­ளோ­ரின் பாது­காப்­பைக் கருத்­தில்­கொண்டு, பொருள் வாங்க அவர்­க­ளுக்­கென ஒரு குறிப்­பிட்ட நேரம் ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதா­வது, பொருட்­களை வாங்க அவர்­க­ளுக்­காக ஒரு மணி நேரம் தனி­யாக ஒதுக்­கப்­படும் என்று ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.படம்: எஸ்டி -

கொரோனா கிருமி பரவி வரும் இந்­தக் காலத்­தில், என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ், கோல்ட் ஸ்டோ­ரேஜ், ஜயண்ட் ஆகிய பேரங்­கா­டி­களில் அன்­றா­டப் பொருட்­களை வாங்க வரும் மூத்­தோர், கர்ப்­பி­ணி­கள், உடற்­கு­றை­யுள்­ளோ­ரின் பாது­காப்­பைக் கருத்­தில்­கொண்டு, பொருள் வாங்க அவர்­க­ளுக்­கென ஒரு குறிப்­பிட்ட நேரம் ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதா­வது, பொருட்­களை வாங்க அவர்­க­ளுக்­காக ஒரு மணி நேரம் தனி­யாக ஒதுக்­கப்­படும் என்று ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து இந்த ஏற்­பாடு நடப்­பிற்கு வரும். ஒவ்­வொரு திங்­கட்­கி­ழ­மை­யும் ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி செயல்­படும் முதல் ஒரு மணி நேரம், மேற்­கூ­றப்­பட்ட அந்த மூன்று பிரி­வி­ன­ருக்­காக ஒதுக்­கப்­படும்.

24 மணி நேரம் செயல்­படும் பேரங்­கா­டி­களில், காலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான பொருட்­களை வாங்­கிச் செல்ல முடி­யும்.

கோல்ட் ஸ்டோ­ரேஜ், ஜயண்ட் உள்­ளிட்ட பேரங்­கா­டி­களை இயக்­கும் டைரி ஃபார்ம் குழு­மம், இது­போன்ற நடை­மு­றையை அறி­மு­கப்­படு­வ­தா­கத் தெரி­வித்­தது.

தமது கடை­களில் பொருள் வாங்க, இந்த வாரத்­தி­லி­ருந்து ஒவ்­வொரு செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் புதன்­கி­ழ­மை­யும் மூத்­தோர், கர்ப்­பி­ணி­கள், உடற்­கு­றை­யு­ளோ­ருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்­கப்­படும் என்று அக்­கு­ழு­மம் கூறி­யது.

டைரி ஃபார்ம் குழு­மத்­தின்­கீழ் 24 மணி நேரம் செயல்­படும் பேரங்­கா­டி­களில், காலை 8 மணி முதல் 9 மணி வரை மேற்­கூ­றப்­பட்ட பிரி­வி­னர் பொருட்­களை வாங்­க­லாம்.

பொது இடங்­களில் மக்­க­ளுக்கு இடையே தூர இடை­வெ­ளியை அதி­க­ரிப்­பது, எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பிரி­வி­ன­ரைப் பாது­காப்பு உள்­ளிட்­டவை தொடர்­பாக சுகா­தார அமைச்சு பரிந்­து­ரை­களை வெளி­யிட்­டி­ருந்­த­தைத் தொடர்ந்து பேரங்காடி நிறுவனங்கள் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளன.

"இந்த ஏற்­பாட்­டின் மூலம் மூத்­தோர் உட்­பட எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டி­ய­வர்­க­ளின் நலன் பாது­காக்­கப்­ப­டு­கிறது. அவர்­க­ளுக்­குக் கூடு­தல் நேர­மும் இட­வ­ச­தி­யும் வழங்­கப்­ப­டு­கிறது.

"மாறி­வ­ரும் சூழ­லில் வாடிக்­கை­யாளர்­க­ளின் நலன் கருதி, தொடர்ந்து புதிய திட்­டங்­களை அறி­மு­கம் செய்ய எண்­ணி­யி­ருக்­கி­றோம்," என்று ஃபேர்பி­ரைஸ் தலைமை நிர்­வாக அதி­காரி சியா கியான் பெங் கூறி­னார்.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நேரத்­தில் பொருள் வாங்க முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர் தங்­க­ளின் முன்­னோ­டித் தலை­முறை அட்­டையை பேரங்காடி ஊழி­யர்­க­ளி­டம் காட்ட வேண்­டும்.

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ருக்­காக திங்­கட்­கி­ழ­மை­களிலும் புதன்­கி­ழமை­களிலும் வழங்­கப்­படும் கூடுதல் சலுகை அவர்­க­ளுக்கு தொடர்ந்து வழங்­கப்­படும். மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நேரத்­தில் பொருள் வாங்க வரும் கர்ப்­பி­ணி­கள் மற்­றும் உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள், தங்­க­ளது நிலை குறித்து பேரங்காடி நுழை­வா­யி­லில் உள்ள ஊழி­யர்­க­ளி­டம் தெரி­விக்க வேண்­டும்.