38,000 பேருக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு

38,000 பேருக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு

3 mins read
aa53340b-73ef-4d9b-93fd-1728ba6ae97d
வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு தற்­போது 38,000 பேருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் இன்­னும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நாடு திரும்­பு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், இந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். படம்: எஸ்டி -

வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு தற்­போது 38,000 பேருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் இன்­னும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நாடு திரும்­பு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், இந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"அதி­க­மான உலக நாடு­கள் தங்­களை முற்­றி­லும் முடக்­கிக்­கொண்­டி­ருப்­ப­தால், இன்­னும் பல சிங்­கப்­பூ­ரர்­கள் நாடு திரும்­பக்­கூடும். ஆகவே, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் தயா­ராக இருக்க வேண்­டும்," என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அமைக்­கப்­பட்­டுள்ள அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங், விரை­வாக மாறி­வ­ரும் உலக நிலை­மை­யைக் கருத்­தில் கொண்டு சிங்­கப்­பூர் தனது எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் கடு­மை­யாக்­கி­யது என்றும் விளக்­கி­னார்.

இந்த வாரம், சுற்­றுப்­ப­ய­ணி­கள், வர்த்­த­கர்­கள் போன்ற குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யவோ வெளி­யே­றவோ தடை விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் திரும்­பும் வேலை அனு­ம­திச் சீட்டு வைத்­தி­ருப்­ப­வர்­கள், அவர்­கள் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, போக்­கு­வ­ரத்து போன்ற அத்­தி­யா­வ­சிய சேவை­கள் வழங்­கு­ப­வ­ராக இருந்­தா­லொ­ழிய அவர்­களும் சிங்­கப்­பூ­ருக்­கும் நுழைய அனு­ம­திக்­கப்­படமாட்­டார்­கள்.

கொரோனா கிரு­மித்­தொற்று எவ்­வித மோச­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தும் என்று கணிக்க முடி­யாத சூழ்­நி­லை­யில், சிங்­கப்­பூர் தனது எல்­லை­க­ளைப் பாது­காக்­கும் முக்­கி­ய­மான முடிவை எடுத்­தது என்­றும் அமைச்­சர் விவ­ரித்­தார்.

"200,000க்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் தற்­போது வெளி­நா­டு­களில் இருப்­ப­தால், நாடு திரும்ப விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான நமது வளங்­க­ளைத் தயார்­நி­லை­யில் வைத்­தி­ருப்­பது முக்­கி­யம்.

"நாள்­தோ­றும் சுமார் 1,200 சிங்­கப்­பூ­ரர்­கள் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்­தும் பிரிட்­ட­னி­லி­ருந்­தும் நாடு திரும்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்," என்­றும் அவர் சொன்­னார்.

சிங்­கப்­பூர் விரைந்து முன்­னேற வேண்­டும்

இரவு கேளிக்கை விடு­தி­க­ளுக்­கும் ஒன்­று­கூ­டல்­க­ளுக்­கும் அதி­க­மா­னோர் இன்­னும் சென்­று­கொண்­டி­ருப்­ப­தால், சிங்­கப்­பூர் அவர்­க­ளுக்­குள் பாது­காப்­பான இடை­வெ­ளியை அதி­க­ரிப்­ப­தற்கு புதிய நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது என்­றும் திரு வோங் கூறி­னார்.

அத்­து­டன் மற்­றொரு நட­வ­டிக்­கை­யாக வேலைக்கு அப்­பா­லும் பள்­ளிக்கு அப்­பா­லும் பத்து பேருக்கு மேல் கூடக்­கூ­டாது என்று அர­சாங்­கம் அறி­வித்­தது.

இந்தப் புதிய நடை­முறை நேற்று இரவு 11.59 மணிக்கு நடப்­புக்கு வந்­தது.

"டிஸ்கோ மற்­றும் இரவு கேளிக்கை விடு­தி­க­ளுக்­கும் மக்­கள் அதிக அள­வில் செல்­கி­றார்­கள். அதில் ஒரு­வ­ருக்கு கிருமி தொற்­றி­யி­ருந்­தால் அது அங்கு குழு­மி­யி­ருக்­கும் அனை­வ­ருக்­கும் பரவி விடும். இது ஒரு மற்­றொரு பெரிய நோய் குழு­ம­மாக உரு­வெ­டுக்­கும்.

"இந்த அபா­யத்­தைத் தடுப்­ப­தற்­கா­கவே அர­சாங்­கம் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­தது. இதில் அனைத்து கேளிக்கை நிகழ்­வு­கள், சினிமா அரங்­கு­கள், துணைப் பாட நிலை­யங்­கள், சமய சேவை­கள் ஆகி­யவை அடங்­கும்," என்­றும் திரு வோங் பட்­டி­ய­லிட்­டார்.

"இந்த நட­வ­டிக்­கை­க­ளால் மக்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யத்­தை­யும் தடங்­கல்­க­ளை­யும் நாங்­கள் உணர்ந்­துள்­ளோம். ஆனால், இந்த நட­வ­டிக்­கை­கள் மக்­க­ளின் உயி­ரைக் காப்­பாற்­றும்.

"இந்த கிரு­மித்­தொற்று தவிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டும் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை என்­றால், இதை­விட இன்­னும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும் அர­சாங்­கம் தயங்­காது. பள்­ளி­க­ளை­யும் வேலை­யி­டங்­க­ளை­யும் மூடு­தல் அவற்­றில் அடங்­கும்.

"எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் பற்றி அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். இத­னால், வெற்றி கிட்­டி­னால் நட­வ­டிக்­கை­கள் தளர்த்­துப்­படும். இல்­லை­யேல் கடு­மை­யாக்­கப்­படும்," என்­றும் அமைச்­சர் வோங் வலி­யு­றுத்­தி­னார்.