நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டு அமர்வு

நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டு அமர்வு

1 mins read
ce7b6905-2065-4f02-8206-490fd1eadc4c
நாடாளுமன்றம் கூட்டம் நேற்று கூடியபோது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அலுவலர், அவரின் உதவியாளர்கள் ஆகியோர் பாதுகாப்பான இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். படம்: GOV.SG -

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தைக் கருத்­தில் கொண்டு நாடா­ளு­மன்­றத்­தி­லும் நேற்று முதல் முறை­யாக பாது­காப்­பான இடை வெளி விட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர்ந்து இருந்­த­னர்.

அதன் கார­ண­மாக சில உறுப்­பி­னர்­கள் பிர­தான சபை அரங்­கில் அமர முடி­ய­வில்லை. மாறாக அவர்­கள் வெளி­நாட்டு பிர­மு­கர்­கள் இருக்­கை­க­ளி­லும் இரண்­டாம் மாடி­யில் உள்ள பார்­வை­யா­ளர் கூடங்­க­ளி­லும் இடம்­விட்டு அமர்ந்­தி­ருந்­த­னர்.

நாடா­ளு­மன்ற அமர்­வின் இடை­வே­ளை­யின்­போது அவர்­கள் தங்­கள் சிற்­றுண்­டி­களை வெவ்­வேறு இடங்­களில் உட்­கொள்­வர், வெவ்­வேறு கழி­வ­றை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வர் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் திரு டான் சுவான் ஜின் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின் தொடக்­கத்­தில் உரை­யாற்­றி­ய­போது விவ­ரித்­தார்.