டியோ: தேர்தலைத் தள்ளி வைத்து காபந்து அரசு அமைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது

டியோ: தேர்தலைத் தள்ளி வைத்து காபந்து அரசு அமைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது

2 mins read
fb329d71-73a3-493c-90fb-637a4ecfbeb9
தேர்­த­லைத் தள்­ளி­வைத்து அதி­ப­ரால் காபந்து அர­சாங்­கம் அமைக்­க­லாம் என்று எதிர்த்­த­ரப்­புத் தலை­வர் டான் செங் போக் தெரி­வித்த பரிந்­துரை அர­சி­ய­ல­மைப்­புச் சட்டத்துக்கு எதி­ரா­னது என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் தெரி­வித்­துள்­ளார். படம்: எஸ்டி -

தேர்­த­லைத் தள்­ளி­வைத்து அதி­ப­ரால் காபந்து அர­சாங்­கம் அமைக்­க­லாம் என்று எதிர்த்­த­ரப்­புத் தலை­வர் டான் செங் போக் தெரி­வித்த பரிந்­துரை அர­சி­ய­ல­மைப்­புச் சட்டத்துக்கு எதி­ரா­னது என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் தெரி­வித்­துள்­ளார்.

டாக்­டர் டான் தெரி­வித்த யோச­னைக்கு அர­சாங்­கத்­தின் பதில் என்ன என்று ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் கிறிஸ்­ட­ஃபர் டிசூசா கேட்­டுக்­கொண்­டார்.

முன்பு 2011ஆம் ஆண்­டில் அதி­பர் தேர்­த­லுக்­குப் போட்­டி­யிட்ட டாக்­டர் டான், இப்­போது சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சிக்­குத் தலைமை தாங்­கு­கி­றார்.

கொரோனா கிரு­மித்­தொற்று நிலைமை சரி­யா­கும் வரை பொதுத் தேர்­த­லைத் தள்ளி வைக்­க­லாம் என்­றும் 2021ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்­குள் பொதுத் தேர்­தலை நடத்த முடி­ய­வில்லை என்­றால் நாட்­டைத் தொடர்ந்து வழி­ந­டத்த அதி­பர், சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட காபந்து அர­சாங்­கத்தை அமைக்­க­லாம் என்று யோசனை தெரி­வித்­தி­ருந்­தார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு டியோ, "இந்த யோசனை சாத்­தி­யமா என்று நான் அர­சாங்க தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யைக் கலந்­தா­லோ­சித்­தேன். அதற்­குத் தலை­மைச் சட்ட அதி­காரி, நிர்­ண­யிக்­கப்­பட்ட காலக்­கெ­டு­வுக்­கும் பொதுத் தேர்­த­லைத் தள்­ளிப்­போ­டு­வது அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­னது என்று பதி­ல­ளித்­தார்," என்­றார்.

"ஒரு நாடு அவ­ச­ர­கா­லத்­தைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தும்­போ­து­தான் பொதுத் தேர்­த­லும் தள்­ளிப்­போ­டப் பட­லாம். அது­போன்ற நிலை இது­வரை சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­பட்­ட­தில்லை. அப்­போ­தும்­கூட நடப்பு அமைச்­ச­ரவை ஆட்­சி­யில் இருக்­கும்­போது, ஒரு காபந்து அர­சாங்­கத்தை அதி­பர் அமைப்­ப­தற்கு சட்ட ரீதி­யா­க­வும் செயல்­மு­றை­யி­லும் தேவை இருக்­காது.

"இப்­ப­டிப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான யோச­னையை ஒரு தெரி­வாக மக்­க­ளி­டம் கூறி, அவர்­க­ளைத் திசை திருப்ப முயல்­வது நன்மை பயக்­காது. மேலும் இது­போன்ற யோச­னை­யைத் தெரி­விப்­ப­தன் மூலம் டாக்­டர் டானுக்கு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் பற்றி தெரி­ய­வில்லை என்­ப­தைப் புலப்­ப­டுத்­து­கிறது.

"அவ­ச­ர­கால பிர­க­டத்­தின்­போது நிய­மிக்­கப்­பட்ட காபந்து அர­சாங்­க­மாக இருந்­தா­லும், வாக்­கா­ளர்­க­ளின் ஆத­ர­வின்றி அமைக்­கப்­பட்ட அந்த அர­சாங்­கத்­தால் எவ்­வித பெரிய முடி­வை­யும் எடுக்க இய­லாது," என்­றும் திரு டியோ விளக்­கம் அளித்­தார்.

தேர்­தலை எப்­போது நடத்­த­லாம் என்­பது பற்றி பிர­த­மர் லீ சியன் லூங் இது­வரை எந்த முடி­வை­யும் எடுக்­க­வில்லை என்று குறிப்­பிட்ட மூத்த அமைச்­சர் டியோ, "தேர்­தலை எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு தாம­தப்­ப­டுத்­து­கி­றோமோ, அவ்­வ­ள­வுக்கு அவ்­வ­ளவு கொரோனா கிரு­மித்­தொற்று நிலை­மை­யும் கணிக்க முடி­யா­த­தாக உள்­ளது," என்­றும் கூறி­னார்.