ஹொங் டாட்: சீனாவில் நிறுவனங்கள் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன

சீனாவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைப் படிப்படியாக மீண்டும் தொடங்கியுள்ளன என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

“சீனாவில் நிலைமை இப்போது படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. சீனப் பொருளிய லின் அளவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது, அதன் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தங்களின் ஆற்றலுக்கு ஏற்ப அதிகரிக்க முடியும்,” என்றும் திரு சீ விவரித்தார்.

சீனாவின் ஹுபெய், ஸிஜியாங், ஹெனான், குவாங்டோங் ஆகிய நகரங்களில் சிங்கப்பூர் அமைத்திருக்கும் நிறுவனங் களை மற்ற இடங்களுக்கு மாற்றும் திட்டம் ஏதும் உள்ளதா என்று பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் கேட்டதற்கு அமைச்சர் பதிலளித்தார்.

சீனாவில் இப்போது நிலைமை மேம்பட்டு வருவதால் சீனாவில் தளம் அமைத்திருக்கும் பத்து சிங்கப்பூர் நிறுவ னங்களில் ஏழு அதன் நடவடிக்கைகளை அங்கு மீண்டும் தொடங்கி விட்டன. இந்த எண்ணிக்கை விரைவில் மேம் படும்,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.