சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் புதிய நடவடிக்கைகள்

தாங்கள் வேலைக்கு அமர்த்தியுள்ள வெளிநாட்டு ஊழியர் களுக்கான தீர்வையைச் செலுத்த மூன்றுமாத கால அவகாச நீட்டிப்பை சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு வழங்கியுள்ளது. இதனால் நிறுவ னங்கள் தங்கள் பணப்புழக்கத்தை இன்னும் நீக்குப்போக்கு டன் மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் அமைச்சு கூறியது.

வெளிநாட்டில் விடுப்பில் உள்ள வெளிநாட்டு ஊழியர் களுக்கு 90 நாட்கள் வரையிலான தீர்வை விலக்கும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நடப்புக்கு வருகின்றன. கட்டுமானத் துறையில் உள்ள குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊழியர்களுக்கான மாதாந்திர தீர்வையையும் அமைச்சு திரும்பக் கொடுக்க முன்வந்துள்ளது. 

தீர்வையைத் திரும்பப் பெற நிறுவனங்கள் கட்டட, கட்டு மான ஆணையத்திடம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் மனிதவளம் உள்ள நிறுவ னங்கள் உள்ளூர் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வ தற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!