$3.16 மில்லியன் ரொக்கம்: அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியவருக்கு அபராதம்

$3.16 மில்லியன் ரொக்கம்: அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியவருக்கு அபராதம்

1 mins read

சிங்கப்பூருக்குள்ளேயும் நாட்டைவிட்டு வெளியேவும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக $3.16 மில்லியன் ரொக்கம் கொண்டு சென்றதை அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறிய 39 வயது இந்தோனீசிய ஆடவர் ஒருவருக்கு இன்று (மார்ச் 26) $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஹெங்கி எனும் பெயர் கொண்ட அவர், கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3ல் $20,000க்கும் அதிகமான ரொக்கத்தைக் கொண்டு சென்றது குறித்து போலிசுக்கு தகவல் கிடைத்தது.

அவர் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது பல்வேறு நாணயங்களில் $120,000க்கும் அதிகமான தொகையை வைத்திருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்தது. ரொக்கத்தைக் கொண்டு செல்வது பற்றி அதிகாரியிடம் அவர் தெரிவிக்க தவறியதாக போலிஸ் கூறியது.

2018ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இதுபோன்ற 39 குற்றங்களை ஹெங்கி புரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

நாட்டு எல்லைக்குள் நுழையும்போதோ அல்லது எல்லையைவிட்டு வெளியேறும்போதோ பெரிய அளவிலான ரொக்கத்தைக் கொண்டு செல்வது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதற்காக ஹெங்கிக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ $50,000 வரையிலான அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்