3 மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்

3 மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் பிரதமர், அதிபர், அமைச்சர்கள்

1 mins read
1bdaad73-cd84-4503-b235-69b719dc1d4b
தற்போதைய சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு நிற்க பிரதமர், அதிபர், அமைச்சர்கள், அரசு பதவி வகிப்போர் ஆகியோர் மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். படம்: எஸ்டி, கவின் ஃபூ, -

தற்போதைய சிரமமான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுபட்டு நிற்க பிரதமர், அதிபர், அமைச்சர்கள், அரசு பதவி வகிப்போர் ஆகியோர் மூன்று மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். அரசு பதவி வகிப்போர் ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று நிலவரம் மோசமாவதை முன்னிட்டு, கூடுதலாக இரண்டு மாத சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக திரு ஹெங் கூறினார்.