டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் உதவி

1 mins read
997bab19-5500-43c7-bc87-e6b33e427abf
கொவிட்-19 அளித்து வரும் இன்னல்களால் டாக்சி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். கோப்புப்படம்: எஸ்டி -

கொவிட்-19 அளித்து வரும் இன்னல்களால் டாக்சி மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். இவர்களுக்கென சென்ற மாதம் வரவுசெலவுத் திட்டத்தின்போது போக்குவரத்து ஆதரவு தொகுப்புத்திட்டத்திற்கு மேல் கூடுதல் உதவி வழங்கப்படும். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 40,000க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கும் தகுதிபெறும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் கிட்டத்தட்ட $78 மில்லியன் வழங்கப்படும். ஒவ்வோர் ஓட்டுநருக்கும் என்டியுசி மாதம் $1,000 என ஒன்பது மாதங்களுக்கு வழங்கிடும்.