ஐந்து நாள் மருத்துவ விடுப்பில் இருப்பவர்கள் மூத்தோரை அணுகக்கூடாது: மருத்துவ நிபுணர்

ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­ட­வர்­கள் எந்­த­வொரு நேரத்­தி­லும் அவர்­க­ளின் குடும்­பத்­தில் உள்ள மூத்­தோரை அணு­கக்­ கூ­டாது என்று தேசிய தொற்­று நோய் தடுப்பு நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­குநர் லியோ யீ சின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு மூத்த குடி­மக்­களே பாதிக்­கப்­படும் வாய்ப்பு அதி­கம் உள்­ளது என்­றார் அவர்.

கடி­ன­மான மூச்­சுத்­தி­ண­றல் அறி­குறி காணப்­ப­டு­வோ­ருக்கு ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு அளிக்­கப்­ப­டு­கிறது. ஒரே குடும்­பத்­தில்­தானே இருக்­கி­றோம் என்று கருதி மூத்­தோ­ரு­டன் இணைந்து சாப்­பி­டு­வ­தைக்­கூட அவர்­கள் தவிர்க்க வேண்­டும் என பேரா­சி­ரி­யர் லியோ நேற்று தெரி­வித்­தார்.

“வீட்­டில் உள்ள மற்­ற­வர்­க­ளு­டன் பேச வேண்­டிய கட்­டா­யம் ஏற்­படும் என்­ப­தால் அவ்­வாறு மருத்­துவ விடுப்பு அளிக்­கப்­பட்­டோர் அறுவை ரக முகக்­க­வ­சத்தை அணிந்­து­கொண்­டி­ருக்க வேண்­டும்.

“மேலும் தங்­க­ளது சொந்த உடல் சுகா­தா­ரத்­தில் அவர்­க­ளின் கவ­னம் இருக்க வேண்­டும். சோப்­புப் போட்டு கைக­ளைக் கழு­வு­வ­தோடு சுத்­தி­க­ரிப்­பபு திர­வத்­தை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும்.

“அவர்­கள் தங்­க­ளது சுற்­றுப்­பு­றத்­தை­யும் தூய்­மை­யாக வைத்­தி­ருத்­தல் வேண்­டும். குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கான கழி­வ­றை­யைத் தவிர்த்­து­விட்டு தனிப்­பட்ட கழி­வ­றையை அவர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்.

“ஒரு­வேளை அதற்கு சாத்­தி­ய­மில்லை எனில் அவர்­கள் பயன்­ப­டுத்­தும் கழி­வ­றையை தூய்­மை­யாக வைத்­தி­ருக்க வேண்­டும். கொவிட்-19 கிரு­மிக்­குக் கார­ண­மான சார்ஸ்-கொவி-2 பற்றி நாம் தெரிந்­து­வைத்­தி­ருப்­ப­தால் இது­போன்ற செயல்­க­ளைக் கடைப்­பி­டித்­தல் அவ­சி­யம்.

“சுவா­சத் துளி­கள் தெறிப்­ப­தால் நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் கிருமி பர­வக்­கூ­டும். அதா­வது, கிருமி தொற்­றிய ஒரு­வ­ரு­டன் ஒரு மீட்­டர் முதல் 2 மீட்­டர் வரை­யி­லான தூர இடை­வெ­ளி­யில் நேருக்கு நேர் சந்­திப்­ப­தன் மூலும் அசுத்­த­மான சுற்­றுப்­பு­றம் அல்­லது அசுத்­த­மான பொருட்­கள் வாயி­லாக கிருமி பர­வக்­கூ­டும்,” என்று கூறி­னார் திரு­வாட்டி லியோ.

மேலும் மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­ப­டு­வ­தன் கார­ணங்­க­ளை­யும் அவர் விளக்­கி­னார். காய்ச்­சல், இரு­மல், தொண்டை வலி, மூக்­குச்­சளி போன்­ற­வற்­றால் கடு­மை­யான மூச்­சுத் திண­ற­லுக்கு ஆளா­னால் முகக்­ க­வ­சத்தை அணிந்துகொண்டு சீக்­கி­ரமே மருத்­துவ உத­வியை நாட வேண்­டும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!