பிரதமர் லீ: நெருக்கடியைச் சமாளிக்க உலகளாவிய தீர்வு தேவை

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க உலகளா­விய தீர்வு அவ­சி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

பொதுச் சுகா­தா­ரம், பொரு­ளியல் இறங்குமுகம், அறி­வி­யல் மற்­றும் ஆய்வு ஆகிய மூன்று துறை­களில் ஒத்­து­ழைப்பு இடம்­பெ­ற­வேண்­டும் என்று அவர் யோசனை தெரி­வித்து இருக்­கி­றார்.

உல­கின் 20 நாடு­க­ளின் தலை­வர்­கள் (ஜி-20) இணை­யம் வழி உச்­ச­நிலை மாநாடு நடத்­தி­னார்­கள். அதில் கலந்­து­கொண்டு தலை­வர்­களு­டன் விவா­தித்­த­போது பிர­த­மர் லீ இவ்­வாறு தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த இடம்­பெ­றக்­கூ­டிய பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­கள் பற்றி குறிப்­பிட்ட திரு லீ, நாடு­கள் தங்­க­ளு­டைய எல்­லைக்­குள் அந்­தக் கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட்­டா­லும் வெளி­யில் இருந்து கிரு­மிகள் உள்ளே நுழை­யக்­கூ­டிய ஆபத்து தொடர்ந்து இருந்து வரும் என்­ப­தைச் சுட்­டி­னார்.

ஆகை­யால் நாம் நம்­மு­டைய ஆற்­றல்­க­ளை­யும் அனு­ப­வத்­தை­யும் பகிர்ந்­து­கொண்டு ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்கு உத­வ­வேண்­டும் என்­றார் அவர்.

கொரோனா மிரட்­ட­லைச் சமா­ளிக்க ஒவ்­வொரு நாடும் அதனதன் நலனை மட்­டும் கவ­னிப்­ப­பது கவ­லை­யாக இருக்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

உல­க­ம­யம் கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­க­ளைத் தவிர்த்­துக்­கொண்டு, அதிக பாது­காப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­றும் ஒன்று மற்­றொன்­றைச் சார்ந்து இருப்­பதை குறைத்­துக் கொள்­வ­தற்­குத் தேவை­யான தேசிய ஆற்­றலை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் பல நாடு­களும் இப்­போது கரு­து­வது இயற்­கை­யான ஒன்­று­தான் என்று திரு லீ தெரி­வித்­தார்.

ஆனால் இப்­படி தன் நலனை மட்­டும் கவ­னித்­துக்­கொண்டு உல­க­ ம­யத்தைப் புறக்­க­ணிப்­பதை நாம் தவிர்த்­துக்­கொள்ளவேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தினார்.

கொரோனா பர­வல், நாம் ஒரு­வரை ஒரு­வர் பின்­னிப் பிணைந்து இணைந்து சார்ந்து இருக்­கி­றோம் என்­ப­தற்கு அடை­யா­ளம் என்று கூறிய திரு லீ, அது உல­க­ம­யத்­தால் ஏற்­பட்டு உள்ள பாதிப்பு அல்ல என்­றார். நாடு­க­ளுக்கு இடை­யில் அதிக ஒத்­து­ழைப்பு இடம்­பெற வேண்­டும். ஒத்­து­ழைப்பு குறை­யக் கூடாது என்­ப­தையே கொரோனா வெளிச்­சம் போட்டு காட்­டு­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

ஜி-20 இணைய மாநாட்­டில் கலந்து­கொள்­ளும்­படி சிங்­கப்­பூ­ருக்கு சவூதி அரே­பியா அழைப்பு விடுத்து இருந்­தது.

அந்த மாநாடு தொடங்­கி­ய­போது பேசிய சவூதி அரே­பிய மன்­னர் சல்­மான், கொரோனா கிருமி மிரட்­ட­லைச் சமா­ளிக்க ஆற்­றல்­மிக்க, ஒருங்­கி­ணைந்த செயல் அவ­சி­யம் என்­றார்.

“மானிட இனத்­திற்கு ஏற்­பட்டு இருக்­கும் இந்த மிரட்­ட­லைச் சமா­ளிக்க உல­க­ளா­விய முயற்சி வேண்­டும். நாம் ஐக்­கி­ய­மாக வேண்­டும். ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­ப­தையே இந்த உல­கம் எதிர்­பார்க்­கிறது,” என்று மன்­னர் கூறினார்.

மூல­தனச் சந்­தை­களை எட்ட முடி­யா­ம­லும் போதிய சுகா­தார வச­தி­கள் இல்­லா­ம­லும் தடு­மா­றக்­கூ­டிய ஏழை நாடு­கள் செலுத்த வேண்­டிய கடன்­தொ­கையை ஒத்தி வைக்­கும்­படி ஜி-20 தலை­வர்­களை அனைத்­து­லக பண நிதி­ய­மும் உலக வங்­கி­யும் வலி­யு­றுத்­தி கேட்டுக்கொண்டு இருக்­கின்­றன.

அதைச் சுட்­டிக்­காட்­டிய சவூதி அரே­பிய மன்­னர், வள­ரும் நாடு­க­ளுக்கு உதவ வேண்­டிய கடமை நமக்கு இருக்­கிறது என்று உறுதிபட கூறி­னார்.

வழக்­கத்­திற்கு மாறான ஜி20 இணைய மாநாட்­டில் கலந்து பேசிய தலை­வர்­கள், கொரோனா மிரட்­டலைச் சமா­ளிக்க ஒட்­டு­மொத்­த­மான செயல் இடம்­பெற வேண்­டும் என்றனர்.

உல­கப் பொரு­ளி­யல் மந்­தத்­தில் வீழ்­வ­தைத் தடுக்க கொள்­கை­களை ஒருங்­கி­ணைக்க வேண்­டும் என்று சீன அதி­பர் ஸி ஜின்­பிங் வேண்டு­கோள் விடுத்­தார்.

இந்­தப் பெரிய தொற்­று­நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் மானிட இனம் வெற்­றி­பெற வேண்­டு­மா­னால் பரந்த அள­வி­லான அனைத்­து­லக ஒத்­து­ழைப்பு தேவை என்று சீன அதி­பர் குறிப்­பிட்­ட­தாக சின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

கொரோனா கிரு­மித்­தொற்று மிரட்­ட­லைச் சமா­ளிக்க செயல்­திட்­டம் ஒன்றை உரு­வாக்க வேண்­டும் என்று ஜி-20 நிதி அமைச்­சர்­களும் மத்­திய வங்கித் தலை­வர்­களும் ஒப்­புக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும் அந்­தத் திட்­டம் தொடர்­பில் விவ­ரங்­கள் இன்­ன­மும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கொரோனா கிரு­மித்­தொற்றை எதிர்த்து நாடு­கள் போராடி வரும் நிலை­யில், சில நாடு­கள் தன்­னைப்­பே­ணித்­தன நட­வ­டிக்­கை­கள் பற்றி விவா­தித்து வரு­கின்­றன.

சில நாடுகள் அத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளைக் கைக்­கொண்டு உள்ளன.

பொருட்­கள் தாரா­ள­மாகக் கிடைப்பதை உறு­திப்­ப­டுத்­த­வும் ஏற்று­மதி கட்­டுப்­பா­டு­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­ள­வும் ஆஸ்­தி­ரே­லியா, கனடா போன்ற நாடு­கள் உறுதி கூறி இருக்­கின்­றன.

அது போலவே ஜி-20 நாடு­களின் தலை­வர்­களும் உறுதி அளிக்க வேண்­டும் என்று அமெ­ரிக்­கா­வின் வர்த்­த­கச் சபை வலி­யு­றுத்திக் கூறி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!