வருமானம் இழந்தோர் உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம்

வருமானம் இழந்தோர் உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம்

1 mins read
2f31486c-c5ec-4020-ac7a-cfaf0aa95bd4
படம்: எஸ்டி -

கொரோனா கிருமி பர­வல் கார­ண­மாக வேலை­களை அல்­லது வரு­மா­னத்தை இழந்­தோர் ஏப்­ரல் 1 முதல் அர­சாங்­கத்­தி­டம் உதவி கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம். தகுதி உள்­ளோ­ருக்கு ஒரு தடவை ரொக்க உத­வி­யாக $500 வழங்­கப்­படும்.

காம்­கேர் உத­வித் திட்­டத்­தில் இடம்­பெ­றாத குறைந்த, நடுத்­தர வரு­மா­னம் உள்ள சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தற்­கா­லிக நிவா­ரண நிதி­யின்­கீழ் இந்த உத­வி­யைப் பெறு­வர்.

அவர்­க­ளின் அடிப்­படை வாழ்க்­கைச் செல­வி­னத்­திற்கு இந்த உட­னடி உத­வித் திட்­டம் கைகொ­டுக்­கும்.

இதற்­கான விண்­ணப்­பம் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சால் நடத்­தப்­படும் எல்லா சமூக சேவை அலு­வ­ல­கங்­க­ளி­லும் எல்லா சமூக நிலை­யங்­க­ளி­லும் ஏப்­ரல் 1 முதல் ஏப்­ரல் 30 வரை கிடைக்­கும்.

கிருமி பர­வல் கார­ண­மாக புதிய வேலையை தேடு­வ­தில் சவால்­களை எதிர்­கொள்­வோர் கொவிட்-19 ஆத­ரவு மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். அதன் மூலம் நீண்­ட­கால நிதி உத­வி­யை­யும் வேலை ஆத­ர­வை­யும் அவர்­கள் பெறு­வர்.

ஊழி­ய­ரணி சிங்­கப்­பூர், வேலை மற்­றும் வேலைத்­தி­றன் பயிற்­சிக் கழ­கம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வேலை மற்­றும் பயிற்­சிக்­கான ஆத­ர­வைப் பெறு­ப­வர்­க­ளா­க­வும் அவர்­கள் இருந்­தால் மே 1 முதல் தகு­தி­பெ­றும் விண்­ணப்­பதா­ரர்­கள் மூன்று மாதங்­க­ளுக்கு மாதம் $800 வரை நிதி உதவி பெறு­வர்.