புதிய கிருமி பரவல் மையமாக சிங்போஸ்ட்: மூவருக்கு பாதிப்பு

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட அஞ்­சல் ஊழி­யர் ஒரு­வர் கடி­தங்­கள் மீது எச்­சில் துப்­பி­ய­தாக ‘வாட்ஸ்­அப்’ வாயி­லாக பகி­ரப்­பட்டு வரும் ஒலிப்­ப­தி­வில் உண்மை இல்லை என சிங்­போஸ்ட் பேச்­சா­ளர் நேற்று தெரி­வித்­தார்.

அந்த ஒலிப்­ப­திவு மலே­சி­யா­வி­லி­ருந்து பரவி வரு­வ­தா­க­வும் சுங்கை புலோ மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த டாக்­டர் கிறிஸ்­டஃபர் லீ என்­ப­வர் பேசு­வ­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பேச்­சா­ளர் கூறி­னார்.

இதற்கிடையே, சிங்­கப்­பூ­ரின் புதிய கிரு­மித்­தொற்று மைய­மாக உரு­வெ­டுத்­தி­ருக்­கும் சிங்­போஸ்ட் எனப்­படும் சிங்­கப்­பூர் போஸ்ட்­டின் பணி­கள் நாளை திங்­கட்­கி­ழமை வழக்­க­நி­லைக்­குத் திரும்­பும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­போஸ்ட் நிலை­யத்­தின் ஊழி­யர்­களில் மூவ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து துப்­பு­ர­வுப் பணி­க­ளுக்­காக பொட்­ட­லங்­க­ளைக் கையா­ளும் பணி­கள் கடந்த வியா­ழன் மற்றும் வெள்ளிக்கிழ­மை­களில் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

அத­னைத் தொடர்ந்து வழக்­க­நிலை திரும்­பி­ய­தும் பொட்­ட­லங்­க­ளின் விநி­யோ­கத்­தில் சிறிது தாத­ம­தம் இருக்­கக்­கூ­டும் என்­ற­போ­தி­லும் கடித விநி­யோ­கத்­தில் எந்த பாதிப்­பும் ஏற்­ப­டாது என்று சிங்­போஸ்ட் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 49 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் மூவர் சிங்­போஸ்ட் ஊழி­யர்­கள். 76 வயது சிங்­கப்­பூர் மாது, 29 வயது மலே­சிய ஆட­வர், 47 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி ஆகி­யோர் அம்­மூ­வர்.

கிருமி தொற்­றி­ய­தாக முத­லில் உறுதி செய்­யப்­பட்ட மாது மலே­சி­யா­வுக்­குச் சென்று வந்­த­வர் என்­றும் குத்­தகை பணி­யா­ளர் அவர் என்­றும் கூறப்­பட்­டது. கடந்த புதன்­கி­ழமை அவ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் வெள்­ளிக்­கி­ழமை இரண்டு முழு­நேர ஊழி­யர்­க­ளுக்கு உறுதி செய்­யப்­பட்­டது.

மூவ­ரும் ஒரே தளத்­தில் பணி­யாற்­றி­ய­வர்­கள். அத்­து­டன் இவர்­கள் யாரும் அஞ்­சல் விநி­யோ­கிப்­பா­ளரோ அல்­லது பொது­மக்­க­ளு­டன் நேரடி தொடர்­பில் இருந்­த­வர்­களோ அல்­லர் என்று சிங்­போஸ்ட் கூறி­யது.

கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளு­டன் வேலை செய்த அனை­வ­ரும் மறு உத்­த­ரவு வரும் வரை வீட்­டில் இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் வேறு யார் யாரெல்­லாம் தொடர்­பில் இருந்­தார்­கள் என்­ப­தைக் கண்­ட­றி­யும் பணி நடந்­து­வ­ரு­வ­தாக சிங்­போஸ்ட் கூறி­யது.

இதற்­கி­டையே கடி­தங்­கள் தொடர்­பான பணி­யில் ஏற்பட்­டி­ருக்­கும் தாக்­கத்­தைக் குறைக்க சிங்­போஸ்ட்­டு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

வரும் வாரத்­தில் பொட்­டல விநி­யோ­கங்­களில் தாம­தம் ஏற்­பட்­டால் பொது­மக்­கள் நிலை­மை­யைப் புரிந்து ­கொண்டு அமை­தி­காக்­கு­மாறு ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!