முகக்கவச விற்பனை உள்ளிட்ட இணைய மோசடிகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

முகக்கவச விற்பனை உள்ளிட்ட இணைய மோசடிகள்: மூவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
8aebe7c6-932b-450b-9f9b-e17c47c2ec25
இணைய மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக பதின்ம வயது இளை­யர் உள்­ளிட்ட மூன்று ஆட­வர்­கள் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்டு உள்­ளது.  படம்: ராய்ட்டர்ஸ் -

இணைய மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக பதின்ம வயது இளை­யர் உள்­ளிட்ட மூன்று ஆட­வர்­கள் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்டு உள்­ளது.

55க்கும் மேற்­பட்ட வெவ்­வேறு மோச­டிச் சம்­ப­வங்­களில் அவர்­கள் ஈடு­பட்­ட­தா­க­வும் மோசடி மூலம் அவர்­கள் $13,500 ஏமாற்­றி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

18 வயது இளை­யர் 50 இணைய மோச­டி­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் $4,900க்கும் மேற்­பட்ட பணத்தை ஏமாற்­றி­ய­தில் அவ­ருக்­குத் தொடர்பு உண்டு என­வும் போலி­சார் கூறி­னர்.

'கேரோசல்' இணைய வர்த்­த­கத்­த­ளத்­தில் முகக்­க­வ­சம் விற்­ப­தாக வெளி­யான விளம்­ப­ரத்­தைப் பார்த்து பல­ரும் வங்கி மூலம் பணத்தை அனுப்­பு­மாறு கேட்­டுக்­கொண்­ட­னர். ஆனால் அதன் பின்­னர் முகக்­க­வ­சம் அவர்­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வில்லை.

விளம்­ப­ரம் செய்­த­வ­ரை­யும் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை என விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

அத­னைத்­தொ­டர்ந்து அந்த இளை­யர் மீது இம்­மா­தம் 19ஆம் தேதி ஏமாற்­றுக் குற்­றச்சாட்டு சுமத்­தப்­பட்­டது.

இதற்கு அடுத்த நாள் மற்­றொரு நப­ரான 26 வயது ஆட­வர் மீது மோச­டிக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

'கேரோசல்' இணை­யத்­த­ளம் மூலம் $2,800 அனுப்பி ஏமாந்த ஒரு­வர் அளித்த புகா­ரைத் தொடர்ந்து அவர் கைது செய்­யப்­பட்­டார்.

மூன்­றா­ம­வ­ருக்கு 31 வயது. $5,600 மதிப்­புள்ள நான்கு தனித்­தனி இணைய மோச­டி­களில் அவ­ருக்­குத் தொடர்பு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 18ஆம் தேதி கைது செய்­யப்­பட்ட அவர் மீது 20ஆம் தேதி குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

ஆப்­பிள் ஏர்­போட்ஸ், மேசைக் கணினி, மிதி­வண்டி போன்­ற­வற்றை விற்­ப­தாக 'கேரோசல்'லில் அவர் செய்த விளம்­ப­ரத்­தைப் பார்த்­துப் பல­ரும் தொடர்­பு­கொண்டு பணத்தை வங்கி மூலம் அனுப்பி வைத்­த­னர். ஆனால் அவர்­க­ளுக்­குப் பொருட்­கள் அனுப்­பப்­ப­டா­த­தோடு அந்த ஆட­வ­ரைத் தொடர்­பு­கொள்­ள­வும் இய­ல­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மோச­டிக் குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு பத்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

தற்­போ­தைய கொவிட்-19 கிருமி பர­வல் சூழ­லைப் பயன்­ப­டுத்தி பொது­மக்­களை ஏமாற்ற முய­லும் மோச­டிக்­கா­ரர்­க­ளின் வலை­யில் விழுந்­து­விட வேண்­டாம் என்­றும் இணை­யத்­தில் பொருட்­களை வாங்­கும்­போது எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கு­மா­றும் பொது­மக்­களை போலிஸ் கேட்­டுக்­கொண்டுள்­ளது.