2020 ஷங்ரிலா கலந்துரை­யா­டல் ரத்து

2020 ஷங்ரிலா கலந்துரை­யா­டல் ரத்து

1 mins read
37318dc9-87b4-46e2-a550-f980b80c0bee
2019. ஜூன் 2 ஆம் தேதி சிங்கபபூர் ‌ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சியில் உரையாற்றும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென். படம்: எஸ்டி கோப்புப்படம் -

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கார­ண­மாக சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தும் இவ்­வாண்­டுக்­கான ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

ஜூன் 5ஆம் தேதி­யி­லி­ருந்து 7ஆம் தேதி வரை இந்த வரு­டாந்­திர கலந்­து­ரை­யா­டல் நடை­பெற திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­து­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டலை ரத்து செய்ய தாம் முடி­வெ­டுத்­த­தாக கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­யும் உத்­தி­பூர்வ கல்­விக்­கான அனைத்­து­லக கல்­விக் கழ­கம் (ஐஐ­எஸ்­எஸ்) தெரி­வித்­தது.

முந்­தைய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல்­களில் 40க்கும் அதி­க­மான நாடு­களைச் சேர்ந்த பேரா­ளர்­கள் கலந்­து­கொண்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இருப்­பி­னும், கொரோனா கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்து வரு­வ­தால் பல்­வேறு நாடு­கள் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் விதித்­துள்­ளதை ஐஐ­எஸ்­எஸ் சுட்­டி­யது.

நிலைமை மேம்­ப­டா­விட்­டால், ஜூன் மாதத் தொடக்­கத்­தி­லும் இந்­தப் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கக்­கூ­டும்.

2002ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­டல் ரத்து செய்­யப்­ப­டு­வது இதுவே முதன்­முறை.

ஷங்­ரிலா ஹோட்­ட­லில் ஒவ்­வோர் ஆண்­டும் வழக்­க­மாக ஜூன் மாதத்­தில் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்று வந்­தது குறிப்பிடத்தக்கது.