சிங்கப்பூர் ஆடவரின் பாஸ்போர்ட் ரத்து

2 mins read
e1f380a6-9990-4608-a965-c93d975b5e2d
வீட்­டிலேயே இருக்க பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை மதிக்காமல் இந்தோனீசியாவின் பாத்தாமுக்குச் சென்று வந்த கோ இல்யா விக்­டர், 53, என்னும் சிங்கபபூரரின் கடப்பிதழை ரத்து செய்வதாக குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

வீட்­டிலேயே இருக்க பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை மீறி­ய­தற்­காக சிங்­கப்­பூ­ரர் ஒரு­வ­ரின் பாஸ்­போர்ட் ரத்து செய்­யப்­பட்டு விட்­ட­தாக குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் புலன் விசா­ர­ணைக்­காக இவ்­வி­வ­கா­ரம் சுகா­தார அமைச்­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உள்­ளது.

கோ இல்யா விக்­டர், 53, எனப்­படும் அந்த ஆட­வர் இம்­மா­தம் 19ஆம் தேதி இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம் தீவி­லி­ருந்து தானா மேரா படகு முனை­யம் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பி­னார்.

ஆசி­யான் நாடு­க­ளுக்­குச் சென்று­விட்டு திரும்­பு­வோர் 14 நாட்­கள் வீட்­டிலேயே இருக்க வேண்­டும் என்ற அர­சாங்க அறி­விப்பு இம்­மா­தம் 16ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அதன்­படி வீட்­டில் தங்கி இருப்­ப­தற்­கான உத்தரவுக் கடி­தம் கோவுக்கு வழங்­கப்­பட்­டது. இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டால் 14 நாட்­கள் முழு­வ­தும் வீட்­டுக்­குள்­ளேயே இருக்க வேண்­டும்.

இந்த நிய­தியை மீறி­னால் அதற்­கான விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்டி இருக்­கும் என அவரை குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­தி­ருந்­த­னர்.

அப்­படி இருந்­தும் அந்­தக் கடி­தத்­தைப் பெற்ற அதே நாளில் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு மீண்­டும் சென்­றார்.

ஐந்து நாட்­கள் கழித்து இம்­ மா­தம் 24ஆம் தேதி சிங்­கப்­பூர் சொகு­சுக் கப்­பல் நிலை­யம் வழி­யாக இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்த கோ சிங்­கப்­பூ­ருக்கு திரும்பி வந்­தார்.

அன்று முதல் ஏப்­ரல் 7 வரை 14 நாட்­கள் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என இரண்­டா­வது அறி­விப்­புக் கடி­தம் அவ­ரி­டம் தரப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக்­குப் பின்­னர் கோவின் பாஸ்­போர்ட் ரத்து செய்­யப்­பட்­டது. இது தொடர்­பாக குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில். "வீட்­டிலேயே இருக்­கு­மாறு அறி­விக்­கப்­பட்ட பின்­னர் மார்ச் 19ஆம் தேதி சிங்­கப்­பூ­ரில் இருந்து புறப்­பட்ட கோ மார்ச் 24ஆம் தேதி திரும்பி வந்­தார்.

"முதல் முறை பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வைப் பின்பற்ற மறுத்த கார­ணத்­தால் கோவின் பொறுப்­பற்றதன்மை வெளிப்­பட்­டுள்­ளது. வேண்­டு­மென்றே விதியை மீறி­ய­தால் அவ­ரது பாஸ்­போர்ட் ரத்து செய்­யப்­ப­டு­வ­து­டன் மேல்­வி­சா­ர­ணைக்­காக இந்த விவ­கா­ரம் சுகா­தார அமைச்­சி­டம் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது," என்று ஆணை­யம் கூறி­யுள்­ளது.

பாஸ்­போர்ட் ரத்து செய்­யப்­பட்­டு­விட்­ட­தால் கோ சிங்­கப்­பூர் குடி­ம­க­னாக நீடித்­தா­லும் அவர் எந்­த­வொரு நாட்­டுக்­கும் பய­ணம் செல்ல முடி­யாது.

குடி­ம­கன் ஒரு­வ­ரின் பாஸ்­போர்ட் இப்­படி ஒரு கார­ணத்­துக்­காக ரத்து செய்­யப்­ப­டு­வது சிங்­கப்­பூ­ரில் இது முதல் சம்­ப­வம். வீட்­டிலேயே இருக்­கு­மாறு பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ரவை மீறி­ய­தற்­காக 45 வயது நிரந்­த­ர­வாசி ஒரு­வர் கடந்த மாதம் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய தடை விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன் அவ­ரது நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் பறிக்­கப்­பட்­டது.

ஆசி­யான் நாடு­க­ளுக்­குச் சென்­ற­வர்­கள் வீட்­டிலேயே தங்கி இருக்­கும் உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என இம்­மா­தம் 16ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு அம­லுக்கு வந்த நடை­முறை 20ஆம் தேதி மற்ற நாடு­க­ளுக்­கும் விரிவு­ ப­டுத்­தப்­பட்­டது.

அதற்­கி­ணங்க, சிங்­கப்­பூ­ருக்கு வரும் எல்லாப் பய­ணி­களும் தங்­க­ளது சுகா­தார, பயண உறு­தி­மொழிகள் அடங்­கிய படி­வத்­தைச் சமர்ப்­பித்து ஒப்­பு­தல் பெற­வேண்­டும்.