வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் ஒன்­று­கூ­டலை தடுத்த 100க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள்

2 mins read
554f4256-6dd8-4576-be17-f559bed37dd8
வெளி­நாட்டு மனி­த­வள நிர்­வா­கப் பிரி­வின் உதவி இயக்­கு­நர் ஆரோன் ஆங் (வலம்) தமது குழு­வு­டன் சேர்ந்து நேற்று காலாங் எம்­ஆர்­டிக்கு அருகே உள்ள திட­லில் கூடிய வெளி­நாட்டு ஊழி­யர்­களை கலைக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார். படம்: எஸ்டி -

கொரோனா கிருமி பர­வு­வ­தைத் தடுப்­ப­தற்­காக பத்து பேருக்கு மேல் ஒன்­று­கூட அரசு தடை விதித்­துள்­ளது.

இத­னால் பொது­இ­டங்­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­களும் பணிப்­பெண்­களும் ஒன்­று­கூ­டு­வது ஓர­ளவு குறைந்­துள்­ளது.

அண்­மைய வாரங்­க­ளாக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அடிக்­கடி கூடும் இடங்­களில் மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

ஒரு­வ­ருக்கு ஒரு­வர் குறைந்­தது ஒரு மீட்­டர் பாது­காப்­பான இடை­வெளி இருக்க வேண்­டும் என்ற கட்­டாய விதி­மு­றைக்­குப் பிறகு பொது­இ­டங்­களில் ஒன்­று­கூ­டும் வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­கா­ரி­கள் ெதாடர்ந்து கலைத்து வரு­கின்­ற­னர்.

சென்ற புதன்­கி­ழமை இத்­த­கைய அம­லாக்க முயற்­சி­களை தீவி­ர­மாக்­கப்­போ­வ­தாக மனி­த­வள அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது.

கலைந்து செல்­லும் உத்­த­ரவை மதிக்­காத ஊழி­யர்­க­ளின் வேலை அனு­ம­திச் சீட்டு மீட்­டுக்­கொள்­ளப்­படும் என்று அது எச்­ச­ரித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யில் 3வது வார­மாக நேற்று பொது­இ­டங்­களில் ஒன்­று­கூ­டிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை­யும் பணிப்­பெண்­க­ளை­யும் கலைந்து செல்ல அதி­கா­ரி­கள் கேட்­டுக் கொண்­ட­னர்.

தீவு முழு­வ­தும் 130க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் இந்த அம­லாக்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பெரு­ம­ள­வில் கூடும் லக்கி பிளாசா, லிட்­டில் இந்­தியா போன்ற இடங்­களில் நாள் முழு­வ­தும் சோத­னை­கள் நடை­பெற்­றன.

கலைந்து சென்ற ஊழி­யர்­கள் அதே இடத்­தில் மீண்­டும் கூடு­வ­தைத் தவிர்க்க அதி­கா­ரி­கள் அதே இடத்தை மீண்­டும் சோத­னை­யிட்­ட­னர்.

போலி­சார், வெளி­நாட்டு ஊழி­யர் நிலைய பணி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரின் உத­வி­யோடு அம­லாக்க நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரி­கள் மேற்­கொண்­ட­னர்.

காலாங் எம்­ஆர்டி நிலை­யத்­துக்­குப் பக்­கத்­தில் உள்ள திட­லில் வார இறு­தி­யில் இந்­தோ­னீ­சிய, பிலிப்­பீன்ஸ் பணிப்ெ­பண்­கள் கூட்­டம் கூட்­ட­மாக கூடி உரை­யாடி மகிழ்­வது வழக்­கம். ஆனால் நேற்று வழக்­கத்­திற்கு மாறாக அந்த இடம் அமை­தி­யா­கக் காணப்­பட்­டது.

அமைச்­சின் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் பற்றி விளக்­கிய மூத்த அதி­காரி ஒரு­வர், கொரோனா கிருமி பர­வ­லுக்கு எதி­ரான கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைப் பற்றி ஊழி­யர்­க­ளுக்கு விளக்க இது ஒரு வாய்ப்­பாக அமைந்­தது என்­றார்.

"கிருமி பர­வ­லைத் தடுக்க வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் முக்­கிய பங்கு இருக்­கிறது," என்று மனி­த­வள அமைச்­சின் வெளி­நாட்டு ஊழி­யர் நிர்­வா­கப் பிரி­வின் அதி­கா­ரி­யான ஜீனட் ஹார் நேற்று கூறி­னார்.