'சுய தொழில் செய்­ப­வர்­க­ளின் கோரிக்கை பரி­சீ­லிக்­கப்­படும்'

'சுய தொழில் செய்­ப­வர்­க­ளின் கோரிக்கை பரி­சீ­லிக்­கப்­படும்'

1 mins read
622f7322-807b-4550-a015-026bd8a2b74e
சுயதொழில் செய்வோருக்கான உதவித் திட்­டத்­துக்குத் தகுதி பெறா­த­வர்­களின் கோரிக்­கை­கள் நீக்­குப்போக்­கு­டன் பரி­சீ­லிக்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது. படம்: எஸ்டி, ஓங் வீ ஜின் -

கொரோனா கிருமி பர­வ­லால் பாதிக்­கப்­பட்ட சுய தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு உதவி திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இந்­தத் திட்­டத்­துக்கு தகுதி பெறா­த­வர்­கள் அர­சாங்­கத்­தி­டம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இந்த நிலை­யில் இவர்­க­ளின் கோரிக்­கை­கள் நீக்­குப் போக்­கு­டன் பரி­சீ­லிக்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

மூன்று வித­மான கோரிக்­கை­களை அமைச்சு பரி­சீ­லித்து வரு­வ­தாக நேற்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் ெவளி­யிட்ட பதி­வில் மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.

தனி­யார் வீட்­டில் வசிப்­போர், குடும்ப வரு­மா­னம், சுய­தொ­ழி­லு­டன் பகுதி நேரம் வேலை செய்­ப­வர்­கள் ஆகிய மூன்று பிரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் கோரிக்­கை­கள் பரி­சீ­லிக்­கப் பட்டு வரு­வ­தாக அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.