சிங்கப்பூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மற்றவை உள்ளூர் சம்பவங்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்தது. எட்டு சம்பவங்கள் முந்தைய கிருமித் தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளவை.
இதற்கிடையே கிருமியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அமைச்சு கூறியது.

